India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
குடியரசு தின விழா 2025நாளை (26.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8.05 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெறும். குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்பு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தியாகிகளை கௌரவித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள 333 கிராம பஞ்சாயத்துகளில் கட்டாயம் கிராம சேவை கூட்டம் நடத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு குறைகள் மற்றும் நிறைகளை தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த கிராம சேவை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர், டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார்கள் கலந்து கொள்வர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள் பணியிடையே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அமர்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் முத்து நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இருக்கை வசதி செய்து தராத 12 நிறுவனம் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நாளை ஜனவரி 26 குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக விளையாட்டு அரங்கில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது. ஆட்சியர் உமா கொடியேற்றி வைக்க உள்ளார். அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் பங்கேற்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கொள்முதல் நிலைய பணியாளர்கள் பணமாகவோ கூடுதலாக நெல்லாகவோ பெறுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக விவசாயிகள் தமிழ்நாடு உழவர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என நாமக்கல் நேற்று ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கே.பி.சரவணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்டத் தலைவர் காசி அசோக்குமார், நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, நலத்திட்ட பிரிவு ராசிபுரம் ஒன்றிய தலைவர் அன்பு ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க நாமக்கல் எஸ்பி ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டிருந்தார். ஒரு வாரமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய வழக்குகளில் தொடர்புடைய, 64 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்றும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கும் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மேலும் நாளை மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 (ம) குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மொத்தம் 164 பட்டதாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா மாயவன் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு பணிகளுக்கு 52 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.