India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 28ம் தேதி காய் கனி பூ அதிகம் மற்றும் குறைந்தபட்ச விலை நிலவரம் தக்காளி ரூ 20 கத்தரி ரூ 25 முருங்கை ரூ 120 வெண்டை ரூ 60 தேங்காய் ரூ 56 எலுமிச்சை ரூ 30 சின்னவெங்காயம் ரூ 30 பெரியவெங்காயம் ரூ 45 பீன்ஸ் ரூ 56 கேரட் ரூ 66 பீட்ரூட் ரூ 30 உருளை ரூ 40 பூசணி ரூ 20 சுரை ரூ 8 முள்ளங்கி ரூ 20 அவரை ரூ 50 கொத்தவரை ரூ 70 உள்ளிட்ட பொருட்கள் இந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயனடைவதற்கான வகையில் வரும் ஜன31 வெள்ளி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை அளிக்கலாம்.
நாமக்கல்லில் வருகிற 31ஆம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண் ஈடு பொருள் இருப்பு விவரங்கள், மேலாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதரத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநிலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (27/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களால், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 போ் பயனடைந்துள்ளனா். கடந்த 2024ஆம் ஆண்டில் ஜனவரி – 3,580, பிப்ரவரி -3,023, மார்ச்- 3,128, ஏப்ரல் -3,296, மே – 3,296, ஜூன் -338, ஜூலை -3,199, ஆகஸ்ட் – 3,462, செப்டம்பர் -3,489, அக்டோபர் -3,495, நவம்பர் -3,280, டிசம்பர் -3,302 பேர் என மொத்தம் 39,938 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – இமயவரம்பன் (94982030141), வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 76வது குடியரசு தின விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு அரங்கில் ஆட்சியர் மருத்துவர் உமா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து குடியரசு தின விழாவில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக வெண்புறாக்களையும் ஆட்சியர் உமா பறக்கவிட்டார்.
76வது குடியரசு தினத்தில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் மூவர்ண கொடியினை எம்பி ராஜேஷ்குமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர்கள் பூபதி (துணை மேயர்), ரணா ஆனந்த், துணை பதிவாளர் மேலாண்மை இயக்குநர் RCMS நாகராஜ், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.