India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 30ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்ததன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (30/01/2025)இரவு 2AM-6AM வரை ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 2025 ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், நாளை (31-01-2025) காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் தை மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர்காலை 10:30 மணி அளவில் பலவிதமான வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும் பின்னர் தங்ககவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோர் ஜன. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் சிற்றுந்து புதிய விரிவான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள், பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஜன.31 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாமக்கல் மாவட்டத்துக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழாவில், அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி ஆகியோா் பங்கேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் மாநில அளவிலான முதல் பரிசை கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினா்.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (30 -01.2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ.30 – 35–40தக்காளி – ரூ.24 – 25வெண்டைக்காய் ரூ.60, அவரைக்காய் – ரூ 55 – 60 – 65கொத்தவரை ரூ.60 முருங்கை ரூ.120, முள்ளங்கி ரூ.20, புடலங்காய் ரூ.50 – 56பாகற்காய் ரூ.56பீர்க்கங்காய் ரூ.64 நீர்பூசணி ரூ.20, பரங்கி ரூ.20 தேங்காய் 56 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஜே.ஜே.செந்தில்நாதன் என்பவரை, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், இணைச் செயலாளராக இரவி, பொருளாளர் விக்னேஷ், துணைச் செயலலாளர்கள் வேல்முருகன், சிவகலை மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களையும் நியமித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (29/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9894167680), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு பொது விநியோகத் திட்டம் தொடர்பான பணிகளில், நாமக்கல் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாவது பரிசும் 2023-24 ஆம் ஆண்டில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் விருஹடினை வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.