Namakkal

News March 1, 2025

நாமக்கல்: பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்

image

நாமக்கல் ஆட்சித்தலைவர் ச.உமா இன்று (01.03.2025) நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏ.கே.சமுத்திரம், பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.

News March 1, 2025

தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்க கவசசிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News March 1, 2025

முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எம்பி 

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் பி ராஜேஷ்குமார் தனது இணையதள பக்கத்தில் மக்கள் போற்றும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

குடிசை வீடு தீ விபத்தில் முதியவர் பலி

image

நாமக்கல் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள ஆவரங்காட்டு புதூரைச் சேர்ந்தவர் ரங்கன்(80). உடல் நல முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். நேற்று முன்தினம் இவரது மனைவி வீராயி சமைப்பதற்காக விறகடுப்பில் தீ பற்றிய போது ரங்கன் படுத்திருந்த வீடு குடிசை வீட்டில் தீப்பற்றியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2025

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

image

குமாரபாளையம் வாசுகி நகர் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த, இவரது மனைவி சுதா வீட்டில் இருந்த எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2025

நாமக்கல் ; இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – தமிழ்குமரன் (8610101063), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 28, 2025

3 நாட்கள் மட்டுமே உள்ளது..உடனே விண்ணப்பியுங்கள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாமக்கல் மட்டும் 73 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்பிக்க இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 28, 2025

இராசிபுரம் மாணவன் கைது

image

ராசிபுரம் அரசு பள்ளியில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் புதன்கிழமை பள்ளி வளாகத்தில் கழிவறையில் சக மாணவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். இதனையடுத்து அதே பள்ளியை சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். தகராறு நடந்ததையும் அவரை தாக்கியதையும் மாணவர் ஒப்புக்கொண்டார். இதனிடையே பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் விசாரணை நடத்தினார்.

News February 28, 2025

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பங்குபெரும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News February 28, 2025

நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம்

image

நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவ விழாவை நடத்த வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் நரசிம்மர், நாமகிரி தாயாா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் தெப்ப உற்சவ விழா மார்ச் 12-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்

error: Content is protected !!