India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) இரவு நேர ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கலில் இருந்து நாளை (செப்.11) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம்(துவ்வாடா), புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா(அண்டோல்), துர்காபூர், அசன்சோல், ஜசிதிஹ், பரூனி போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளது.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நாமக்கல் மக்களே..,தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி காலங்களில் அரசு சார்பாக ரூ.12,000 வழங்கப்படும்.
▶️Tally பயிற்சி
▶️லாரி டிரைவர் பயிற்சி
▶️விற்பனை பொருள் நிர்வாகி
▶️பிராட்பேண்ட் தொழில்நுட்ப பயிற்சி
▶️தையல் பயிற்சி
இவைகளுக்கு விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

▶️நாமக்கல் மாவட்ட இணையதளம்:https://namakkal.nic.in/ இதில் மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், முக்கிய எண்கள் போன்றவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️நாமக்கல் மாநகராட்சி:https://www.tnurbantree.tn.gov.in/namakkal/ இதில் மாநகராட்சி சார்ந்த புகார்களுக்கு அணுகலாம்.
▶️மாவட்ட நீதிமன்றம்:https://namakkal.dcourts.gov.in/case-status-search-by-petitioner-respondent/இதில் நீதிமன்றம் சார்ந்த சேவைகளைப் பெறலாம்.

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரைவேட் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்:
▶️டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆபீஸ் அலுவலர்
▶️எல்.ஐ.சி ஆலோசகர்
▶️நிதி நிறுவனத்தில் மேனேஜர்
▶️கேசியர் வேலை
▶️செக்யூரிட்டி வேலை
▶️டெலி காலர் வேலை
மேல்கண்ட பணிகள் குறித்த விவரங்கள் தெரிய, விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே., அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <

நாமக்கல்: ராசிபுரம், இந்திராகாலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி சீனிவாசன், வைத்தீஸ்வரி. இவர்களுடைய மகள் தியா(5) நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெருநாய் தியாவை கடித்துக் குதறியதில், சிறுமியின் இடது பக்க காது துண்டானது. உடனே அக்கம் பக்கத்தினர் அந்தத் தெருநாயை விரட்டினர். இதனால், படுகாயமடைந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.