Namakkal

News September 15, 2025

நாமக்கல் மக்களே நாளை ரெடியா இருங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️நாமக்கல் மாநகராட்சி – அரசு துவக்கப்பள்ளி நாமக்கல்.
▶️திருச்செங்கோடு – நாடார் திருமண மண்டபம் திருச்செங்கோடு.
▶️காளப்பநாயக்கன்பட்டி – கலைவாணி திருமண மண்டபம் துத்திக்குளம்.
▶️பள்ளிபாளையம் – கொங்கு கலையரங்கம் வெடியரசம்பாளையம்.
▶️பரமத்தி – சமுதாய நலக்கூடம் மேலப்பட்டி.
▶️வெண்ணந்தூர் – அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி தேங்கல்பாளையம்.

News September 15, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் நேற்று (செப். 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால், இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களுக்குப் பிறகு, முட்டை விலை 5 காசுகள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News September 15, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.14 நாமக்கல்-( ராஜமோகன் -9442256423 ) ,வேலூர் -( ரவி -9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி -9498169110 ), திம்மநாயக்கன்பட்டி -(ரவி -9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 14, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் உட்கோட்ட அதிகாரியை நியமிக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

BREAKING: நாமக்கல் அருகே 16 பேர் காயம்!

image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மசக்காளிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தேனீக்கள் கடித்ததில் 9 மாணவிகள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். தேனீக்கள் கடித்ததில் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் 7 பேர் என மொத்தம் 16 பேர், சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 14, 2025

நாமக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 14, 2025

நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News September 14, 2025

நாமக்கல்: கம்மி விலையில் பஸ் டிக்கெட்! CLICK NOW

image

நாமக்கல் மக்களே.., இன்று(செப்.14) வார விடுமுறையை முன்னிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்துள்ளீர்களா..? திரும்ப செல்ல ரிட்டர்ன் டிக்கெட் போட்டாச்சா..? கவலை வேண்டாம்! தமிழக அரசின் சிறப்பு பஸ்களில் மலிவு விலையிலேயே புக் செய்யலாம். அதற்கு <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 14, 2025

நாமக்கல்: +2 முடித்தால் அரசு வங்கி வேலை!

image

நாமக்கல் மக்களே., அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான ’BOP Capital Markets’நிறுவனத்தில் காலியாக உள்ள ’பிஸ்னஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 14, 2025

நாமக்கல்: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!