Namakkal

News March 28, 2025

நாமக்கல்லில் புத்திரதோஷம் நீக்கும் கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் கைலாசநாதர் என்றும் அன்னை அறம்வளர்த்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டில் வல்வில் ஓரி மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு, கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள, கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

News March 28, 2025

நாமக்கல்லில் முட்டை விலை 25 காசுகள் அதிகரிப்பு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 27ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.25 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று நாமக்கல் – ஆகாஷ் ஜோசி ( 97110 43610), ராசிபுரம்- விஜயக்குமார் ( 94981 04763), திருச்செங்கோடு – கிருஷ்ணன் ( 94981 98444), மற்றும் வேலூர் – சங்கீதா ( 94982 10142) ஆகியோர் என்று நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவர்.

News March 28, 2025

12,000 புத்தகங்கள்: அசத்தும் அரசுப் பள்ளி!

image

நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலகத்தில் , அரசுப் பள்ளி அளவில் வேறு எங்குமே இல்லாத வகையில் 12,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, பழங்காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் புத்தகம் வாசிப்பதற்காகவே நூலகத்துடன் இணைந்த சகல வசதிகளுடன் கூடிய வாசிப்பு அறையும் உள்ளது. SHARE IT!

News March 28, 2025

சேந்தமங்கலம் அருகே வரும் 19-ந் தேதி ஜல்லிக்கட்டு

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியில் இருந்து சாலையூருக்கு செல்லும் பிரதான சாலையில் வருகிற 19-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்காக அங்குள்ள சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. போட்டி நாளன்று 500 காளைகள் பங்கேற்க விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

News March 28, 2025

நாமக்கல்: கொளுத்தும் வெயிலில் செய்யக்கூடாதது என்ன?

image

நாமக்கல்லில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ▶️காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶️வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶️தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.

News March 28, 2025

நாமக்கல்: இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,342 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 92 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் 1,698 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.

News March 28, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட் டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை செய்யப்படவில்லை.

News March 28, 2025

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கோனூர் அருகே கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (50).இவர் கடந்த 25-ந் தேதி தனது டூவீலரில் கோனூர் கந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News March 27, 2025

நாமக்கல்லில்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் நடராஜன் (9442242611), திருச்செங்கோடு -மகாலட்சுமி (7708049200), வேலூர்- ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!