India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக வரும் ஏப்ரல் 4,5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை SHARE பண்ணுங்க!
நாமக்கல், திருச்சொங்கோட்டில் அர்த்தநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, உடலில் ஒரு பாதி ஆணாகவும், மறுபாதிப் பெண்ணாகவும் சிவபெருமாள் உள்ளார். இக்கோவில் சென்று சிவனை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வாதகாக சொல்லப்படுகிறது. மேலும், திங்கள், பௌர்ணமி, அமாவாசை முதலான நாட்களில் வீட்டில் அர்த்தநாதீஸ்வரரை விளக்கேற்றி வழிபடத் தம்பதிகளின் அன்னோனியம் பெருகுமாம்.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.118 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டின் 24 மாநகராட்சிகளில் கடந்த 2024-2025-ம் நிதியாண்டில், நாமக்கல் மாநகராட்சி சொத்துவரி வசூலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுதான் மாநகராட்சி உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், இலக்கினை அடைய உதவிய பொதுமக்கள், மேயர் – துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர அலுவலர்கள், பணியாளர்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (31/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – மனோகரன் (9952376488) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், பங்குனி திங்கள் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 10 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும், பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.