Namakkal

News April 5, 2025

நாமக்கல்: நாளை மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 5, 2025

குடும்ப பிரச்சனை தீர்க்கும் அற்புத கோவில்

image

கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக அறப்பளீஸ்வரர் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குடும்ப பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு, கடன் சுமை போன்ற பிரச்சனைகள் அகலுமாம். குடும்ப பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 5, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 5, 2025

நாமக்கல்: ஆசிரியர் வேலை வாய்ப்பு முகாம்!

image

தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (13/04/2025) அன்று நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். மேலும், தகவல்களுக்கு 7010967009-க்கு தொடர்பு கொள்ளவும். இதை SHARE செய்யவும். 

News April 4, 2025

நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

image

இரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்ட Group D CEN 08/2024 -32438 காலிப்பணியிடங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் மனுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

News April 4, 2025

நாமக்கல்லில் பார்க்க வேண்டிய இடங்கள்

image

நாமகிரி அம்மன் கோவில் – நாமக்கல். ஆஞ்சநேயர் கோவில் – நாமக்கல். அா்த்தநாரீஸ்வரர் கோயில் – திருச்செங்கோடு. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி- கொல்லிமலை. படகு இல்லம் மற்றும் வியூ பாயிண்ட் – கொல்லிமலை. ஜேடர்பாளையம் அணை – கபிலர்மலை. நாமக்கல் கோட்டை – நாமக்கல். இந்த கோடையில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை share பண்ணுங்க.

News April 4, 2025

நாமக்கல்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (ஏப்., 5ல்) காலை, 11:00 மணி முதல் 5:00 மணி வரை செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெற இதை SHARE செய்யுங்கள்!

News April 4, 2025

நாமக்கல்லில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த <>பணிகளுக்கு இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

News April 4, 2025

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்துவந்த முட்டை விலை, திடீரென 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

News April 4, 2025

திருச்செங்கோட்டில் 5 பேரை கடித்து குதறிய நாய்

image

நாமக்கல்: திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம் பகுதியில் நேற்று இரவு வெறிநாய் கடித்து சிறுவன், சிறுமி உள்ளிட்ட 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு நகராட்சி சூரியம்பாளையம் பகுதியில், தெருவில் சுற்றித்திரியும் வெறி நாய் கடித்து ருத்ரா (9), குமரன் (7), தமிழ்செல்வி (63), சதீஷ் (40), வாசுகி (56) ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!