India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், <

நாமக்கல் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு 30% மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சுயதொழில் துவங்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும், https://www.thagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதள முகவரியில் உரிய விண்ணப்பிக்கலாம். இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் மேசன் பார்பென்டர் எலக்ட்ரீசியன் கார்பென்டர் பிளம்பர் வெல்டர் கொல்லர் கண்ணாடி வேலை ஏ.சி.மெக்கானிக் பெயிண்டர் டைல் லேயர் ஆகிய தொழில்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 04286-280220 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமுர்த்தி கூறியுள்ளார்.

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவும்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 92. இராசிபுரம் (தனி), 93.சேந்தமங்கலம் (ப.கு.). 94.நாமக்கல், 95. பரமத்தி-வேலூர், 96. திருச்செங்கோடு, 97. குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1629 வாக்கு சாவடிகள் அமைந்துள்ளது என நாமக்கல் மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) 7 மி.மீட்டரும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 24-ந் தேதி 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில், ஒரு பழமையான வைணவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள கொடிமரத்திற்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் திருக்கோடி பூஜையில் கலந்து கொண்டு, சிவப்பு மலர்கள் வைத்தும், சூரை தேங்காய் உடைத்தும் வழிபட்டால் குழந்தை பாக்கியம், திருமணத் தடை, மற்றும் கடன் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
Sorry, no posts matched your criteria.