India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கலில் இருந்து இன்று (வியாழன்) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், நாளை (வெள்ளி) அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் தயவுகூர்ந்து இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி பயனடையந்துகொள்ளவும்.

நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப். 26) நடைபெற உள்ளது. பள்ளிபாளையம், பொத்தனூர், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெறும். பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல்: தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சியின் நிறுவனர் விஜய் அவர்களின் பிரச்சாரத்திற்கான இடத் தேர்வு குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா அவர்களை இன்று (செப். 25) சந்தித்து பேசினார். விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து வரும் பிரச்சாரத்திற்கு, சேலம் சாலை கே.எஸ். திரையரங்கம் அருகிலுள்ள இடம் இறுதி செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அண்ணா மிதிவண்டி போட்டி வரும் சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும், மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கும் நடைபெறுகிறது.மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் தொடங்கும் இந்த போட்டியில் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.முன்பதிவு (ம)தகவல் தொடா்புக்கு பயிற்றுநா் வினோதினியை 82203-10446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.9 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.99 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 525 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள் எரிவாயு முகவர்கள் விநியோகஸ்தர்கள் எரிவாயு நுகர்வோர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் (செப்.30) செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

நாமக்கல் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் செப்.27 நாமக்கல் மற்றும் கரூரில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். நாமக்கல்லில் ஆண்டகலூர் கேட் சந்திப்பில் காலை 11.00 அளவில் விஜய்க்கு வரவேற்பு நிகழ்வும், நகரின் மத்தியில் பழைய RTO ஆபீஸ் எதிரே 100 அடி சாலையில் மக்கள் மத்தியில் பேசவுள்ளார். இந்தநிலையில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த,பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி நாமக்கல் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <
Sorry, no posts matched your criteria.