Namakkal

News September 26, 2025

நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வங்கி வேலைகள்!

image

நாமக்கல் மக்களே.., உங்களுக்கான வங்கி வேலை வாய்ப்புகள்:
1)இந்தியன் வங்கி வேலை: https://indianbank.bank.in/career/
2)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை: https://ibpsonline.ibps.in/iobjul25/
3) SBI வங்கியில் வேலை: https://sbi.bank.in/web/careers/current-openings
4) கனரா வங்கி வேலை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSco5TvC92XJfhxRFxKMbIG-vY62qm-fgi81mdCML8SfgGBbFA/viewform (SHARE IT)

News September 26, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை(செப்.27) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல, 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் நாமக்கல்லில் இருந்து செல்வதால் பொதுமக்கள் முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

News September 26, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து இன்று(செப்.26) இரவு 10:50 மணிக்கு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு 06244 மைசூர் வந்தேபாரத் ரயிலிலும் நாளை(செப்.27) காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்ல 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட்கள் உள்ளன.

News September 26, 2025

நாமக்கல்: அரசு கல்லூரியில் உடனடி வேலை!

image

நாமக்கல் மக்களே…, தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் மீண்டும் 881 கௌரவ விரிவுரையாளர்கள்(Guest lecturers) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் ரூ.25,000 முதல் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.8. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

நாமக்கல்: சித்தப்பாவை கொலை செய்த மகன்!

image

நாமக்கல்: கொல்லிமலை ஒன்றியம் பள்ளக்குழிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்(60) நேற்று காலை முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த போலீசார் விசாரணையில், இவர் தனது அண்ணன் மகனான துரைசாமியின் தகாத உறவை கண்டித்ததால் அவர் செல்வராஜை படுகொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 25, 2025

நாமக்கல் இரவு நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று செப்டம்பர்.25 நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் -சின்னப்பன் ( 9498169092), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.

News September 25, 2025

இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருதுக்கு விண்ணப்பிக்க பெயர், முகவரி, கல்வி தகுதி, பணித்துறை மற்றும் சமூக சுற்றுச்சூழல் பங்களிப்புகள் குறித்த விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் (Annexure-I) பூர்த்தி செய்து forests.tn.gov.in மூலமாக அல்லது மாவட்ட வன அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

News September 25, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து இன்று (வியாழன்) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், நாளை (வெள்ளி) அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் தயவுகூர்ந்து இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி பயனடையந்துகொள்ளவும்.

News September 25, 2025

நாளை நாமக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப். 26) நடைபெற உள்ளது. பள்ளிபாளையம், பொத்தனூர், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெறும். பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 25, 2025

நாமக்கல்: ரூ.59,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி நாள் 02.10.2025 ஆகும். கரூர் மக்களே, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!