India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியலில் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.9,000 உதவித்தொகையுடன் 1 வருட பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க<

நாமக்கல் மக்களே தமிழ்நாடு வனத்துறையின் கீழ் முதுமலை புலிகள் காப்பகத்தில் காலியாக உள்ள 9 யானை காவடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் பேச தெரித்திருந்தால் போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

தவெக சார்பில் நேற்று முன் தினம் நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 4 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததால், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், நாமக்கல் மாவட்டச் செயலர் சதீஷ் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், பாதுகாப்புக்கு தொந்தரவு ஆகிய பிரிவுகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

நாமக்கல் மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

நாமக்கல்: எருமப்பட்டி யூனியனில் உள்ள போடிநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவக்குமார் (36), நேற்று முன்தினம் இரவு சாக் கடை கால்வாய் திண்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 10 அடி ஆழமுள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரின் நுாற்பாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின்வாரியத்தினர் இணைப்புகளை சீரமைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!
Sorry, no posts matched your criteria.