India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (ஆகஸ்ட் 4) மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 441 பேர், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளபோதிலும், கடந்த சில நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.4.55 ஆகவே நீடிப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், 11-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 அன்று கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பொருட்கள், தள்ளுபடி மானியத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – பெருமாள் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமராபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 2 சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர், குழந்தையை இறக்கிவிட்டு விட்டுச் சென்றுவிட்டார். அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதையடுத்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.4 ) மாவட்ட ரோந்து அதிகாரி – ஆகாஷ் ஜோஷி ( 9711043610), நாமக்கல் – வெங்கடாச்சலம் ( 9445492164 ), ராசிபுரம் – நடராஜன் ( 9442242611), திருச்செங்கோடு – மகாலக்ஷ்மி ( 7708049200), வேலூர் – ஷாஜஹான் (9498167357) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க <
➡️ நாமக்கல் மாவட்டத்தில் நாளை 36,436 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!
நாமக்கல், பழனி வழியாக தினசரி இயங்கும் 22651 சென்னை சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு ரயில், இன்று (11.07.2025) முதல் 15 நிமிடங்கள் முன்னதாக பாலக்காடு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், ஜோலார்பேட்டை, சேலம், இராசிபுரம் வழியாக அதிகாலை 3:34 மணிக்கு நாமக்கல் வந்து அதிகாலை 3:35 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.