India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (03.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனையொட்டி, அன்று நாமக்கல் பூங்கா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார். இத்தகவலை பாமக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கீரம்பூர், நாமக்கல்-637207 என்ற முகவரிக்கு அக்.08ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்.11ந் தேதி காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொது நிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கூட்டாய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

1)இந்தியன் வங்கி: https://indianbank.bank.in/career/
2)மத்திய காவல் துறை : https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
3) SBI வங்கி: https://sbi.bank.in/web/careers/current-openings
4)மத்திய அரசு பள்ளி: https://drive.google.com/file/d/1H3Qkx7qhQ7SwvX1jCAfjn1kNvji0-Biy/view
5)இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை:www.iimtrichy.ac.in
அதிகம் SHARE பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே <

நாமக்கல் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <
Sorry, no posts matched your criteria.