Namakkal

News October 4, 2025

நாமக்கல்: தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி!

image

நாமக்கல் (ம) கொல்லிமலை வட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிறு வரை மெக்கானிக், வெல்டர், எலக்ட்ரீசியன், கொல்லர், பிளம்பர், பெயிண்டர் போன்ற தொழில்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடவே தினமும் ரூ.800 சம்பளம், மதிய உணவு, பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் 04286280220 தொடர்பு கொள்ளலாம்.

News October 4, 2025

நாமக்கல்: மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

image

நாமக்கல் அரசு ஆண்கள்(தெற்கு) மேல்நிலை பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, அக்.14ந் தேதி அரசு/தனியார் பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அக்.15ந் தேதி அரசு/தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் காலை 09.30 மணியளவில் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286292164 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.

News October 4, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் இன்று (அக்டோபர் 3) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 4) முதல் முட்டையின் விலை ரூ. 5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 4, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.03 நாமக்கல் – (தங்கராஜ்- 9498110895) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு- 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 3, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (03.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 3, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் செம வாய்ப்பு!

image

நாமக்கல் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 12-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க மக்களே. ஒருவருக்காவது உதவும்!

News October 3, 2025

நாமக்கல்லுக்கு வரும் அன்புமணி ராமதாஸ்!

image

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனையொட்டி, அன்று நாமக்கல் பூங்கா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார். இத்தகவலை பாமக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

News October 3, 2025

நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜாமீன் மறுப்பு !

image

தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .

News October 3, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கீரம்பூர், நாமக்கல்-637207 என்ற முகவரிக்கு அக்.08ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 3, 2025

நாமக்கல்லில் கிராமசபைக் கூட்டம்!

image

நாமக்கல்லில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்.11ந் தேதி காலை 11 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் (ம) பொது நிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!