India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. இங்கு திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். SHARE பண்ணுங்க!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெறுவதற்கு வரும் அக்.10ந் தேதிக்குள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற (ம) பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். இணைய தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு மின் ஒயரிங் தொழிலில் 5 வருட செய்முறை அனுபவம் (ம) 21 வயது நிரம்பியவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் https://skilltraining.tn.gov.in/ இல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அக்.17க்குள் அனுப்பிக்க வைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல். SHAREIT

நாமக்கல் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – அக். 23 ஆகும். விவரங்களுக்கு <

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, நாமக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே<

நாமக்கல் மாவட்டத்தில் 15 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள வேளாண் தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ARS வலைதளத்தில் பதிவு செய்து ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வங்கி கடன் மூலம் பெற்று பயன்பெறலாம் ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 2025-26 ஆண்டிற்கான திருக்குறள் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ/மாணவியர் அக்.31ந் தேதிக்குள் https://tamilvalarchithurai.org/tkm/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கோபியை சேர்ந்தவர் ரேவதி, 35; இவரது கணவர் ராஜ்குமார், 35; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமிதா 40, என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ரேவதி, கணவரை கண்டித்துள்ளார். ராஜ்குமார் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் ராஜ்குமார் மற்றும் சுமிதா இருவரும் குமாரபாளையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.