India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி இன்றைய விலை மல்லி ரூ.400, முல்லை ரூ.200, ஜாதிமல்லி ரூ260, காக்கட்டான் ரூ 120, கலர் காக்கட்டான் ரூ100 , சம்பங்கி ரூ60, அரளி ரூ.40, வெள்ளை அரளி ரூ.50, மஞ்சள் அரளி ரூ.100.
கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று இன்று பள்ளிபாளையம் நோக்கி வரும்பொழுது, வழிகளில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து வெப்படைபோலீசார் வாகனத்தை மடக்கி பிடித்து, அதில் உள்ள நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் காரணமாக பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (செப்.,27) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்கள் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை, 10:30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை மஞ்சள் நிற உடையில் பக்தர்களுக்குகாட்சி தந்தார் பத்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தினமும் காலை11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.
நாமக்கல்: ராசிபுரம் அருகே ராசி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் சோதனையில் 1,120 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நான்கு இளைஞர்கள் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சியில் மூதாட்டி இடம் 100 நாள் அட்டை வழங்க 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் தங்கதுரை-யை ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் தொடர்பான தகவல்களை வழங்க கண்காணிப்பாளர் சுபாஷ் அவர்களின் 9445048878 இந்த செல்லில் எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம்.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.104-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.102-க்கும் விற்பனையாகி வருகின்றன. அதேபோல் முட்டை விலை ரூ.5.05 காசுகளாகவும் நீடித்து வருகிறது. புரட்டாசி மாதம் எதிரொலியாக கறிக்கோழி மற்றும் முட்டை விலைகளில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் நீடித்து வருகிறது.
நாமக்கல் தமிழ் சங்கம் சார்பில் வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களை பாராட்டி, கௌரவப்படுத்தும் விழா நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் தலைவர் மரு.குழந்தைவேல் தலைமை தாங்க, ஒருங்கிணைப்பாளர் தில்லை சிவக்குமார் வரவேற்பு ஆற்ற உள்ளார். மேலும், நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாமக்கல்: மல்லசமுத்திரம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும், அண்ணாதுரை என்பவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. கடந்த, 22ல் அண்ணாதுரை மற்றும் இவரது மகன் தமிழ்செல்வன் ஆகியோர் கணேசனிடம் தகராறில் ஈடுபட்டு அவரது மருமகனையும் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீசார் அண்ணாதுரை, தமிழ்செல்வனை நேற்று கைது செய்தனர்,
நாளை வியாழக்கிழமை 26ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் துறையூர் சாலை அமைந்துள்ள பாவலர் முத்துசாமி திருமண மண்டபத்தில் நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியர் உமா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளார். மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.