India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கோட்ட அலுவலங்களில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதியும், பள்ளிபாளையம் அலுவலகத்தில் 14ம் தேதியும், திருச்செங்கோடு அலுவலகத்தில் 20ம் தேதியும், ராசிபுரம் அலுவலகத்தில் 28ம் தேதியும், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது மின் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இத SHARE பண்ணுங்க!
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 465 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் இந்தியன் வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவச துரித உணவு (Fast Food) தயாரித்தல் பயிற்சி” வரும் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோர் 88259 08170, 04286 221004 எண்களில் தொடர்பு கொண்டு வரும் 14ஆம் தேதிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி அளவில் வரை பதிவான மழை அளவு விவரத்தை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குமாரபாளையம் 6 மிமீ, மங்களபுரம் 19.80 மிமீ, ராசிபுரம் 9 மிமீ, கொல்லிமலை செம்மேடு 5 மிமீ என 4 இடங்களில் மொத்தம் 39.80 மிமீ மழை பதிவாகியுள்ளது என செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயில் நாளை(ஆக.10) ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் நாமக்கலில் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்லும்.
நாமக்கல் மக்களே..,நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரங்கள், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். உடனே SHARE
நாமக்கல்: தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு ‘அக்னிவீரா்’ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் செப். 2ஆம் தேதி முதல் ஆண்களுக்கும், 5ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. இதில், தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘இலகு மோட்டார் வாகன Driver(LMV)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 8th முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க இங்கே <
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, வழங்க உள்ளார். இதில் ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.