India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவினர், நாமக்கல் பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டடத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நாமக்கல் பூங்கா சாலையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இதில் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் உள்ளது இங்கு 57 கடைகள் இரண்டு ஹோட்டல் மூன்று கட்டண கழிப்பிடம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் இருக்கும் இடம் ஏலம் விடப்பட்டது இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூபாய் 4 கோடி வருவாய் வந்துள்ளதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், நேற்று நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில் வரும், 15இல் நாமக்கல் மாநகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் எம்.எல்.ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நாளை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நாமக்கல் பூங்கா சாலையில் தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற உள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை எடுத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட உள்ளது. சங்கத்தைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
நாமக்கல்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரவீன்குமார் – சுஜிதா. இவர்களது மகள் கிருஷ்மிதா (5) உலக சாதனைக்காக, யோகா நிகழ்ச்சி நடத்தினார். இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். இதையடுத்து, 15 நிமிடத்தில், 75 யோகாசனங்கள் செய்து சிறுமி உலக சாதனை படைத்தார். இது, ஹைரேன்ஜ் புக் அப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பருவமழை காரணமாக நோய்தொற்று காணப்பட்டது. குறிப்பாக நாமக்கல் மாநகராட்சி இராசிபுரம் நாமகிரிப்பேட்டை திருச்செங்கோடு பகுதிகளில் நோய்தொற்று காணப்பட்டது. நோய்த்தொற்று காணப்பட்ட பகுதிகளில் குழு அமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால் தற்போது நோய்தொற்று கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதம் பிறந்து மூன்றாவது சனிக்கிழமை முடிவுற்றுள்ளது இந்நிலையில் நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.05 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு குறையும் என்பதால் அதன் விளையும் குறையும் என கருதப்பட்டது ஆனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ரூ 5.05 என்ற அளவிலேயே மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
திரு அருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று சிறப்பித்தார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வள்ளலாரின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் கேஎஸ்ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (06-10-2024) நிலவரப்படி கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ. 104க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும், முட்டை விலையை பொறுத்தவரையில் ஒரு முட்டை ரூ.5.05 காசுகளாக நீடித்து வருகிறது. புரட்டாசி மாதம் தொடக்கம் முதலே விலைகளில் மாற்றம் எதுவும் இன்றி நீடித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.