India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்: ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!
வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்புப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2,50,000, இரண்டாம் பரிசாக ரூ.1,50,000, மூன்றாம் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படும் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
நாமக்கலில் இருந்து நாளை (15.08.2025) வெள்ளிக்கிழமை காலை 5:42 மணிக்கு திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல 07331 ஹூப்ளி – காரைக்குடி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. சுதந்திர தின விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளவும்.
மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யவும்.
திருச்செங்கோடு அடுத்த இளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனையில், பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட காயங்கள், மறுவாழ்வு மையம், மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இலவச பிசியோதெரபி மற்றும் ஆலோசனை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73731-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நாமக்கல் மக்களே, Hindustan Petroleum Corporation Limited காலியாக உள்ள FTPA பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் வரும் செப்.14 தேதி வரை, இந்த <
நாமக்கல் மாவட்டத்தில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (வியாழக்கிழமை) 2 மி.மீட்டரும், நாளை (வெள்ளிக்கிழமை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும், அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும் இருக்கும் என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆக.15-ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை மதுபான கடைகள் மற்றும் கூடங்கள் மூடப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதையோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையோ தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – சுப்ராயன் ( 9498169031), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், இரவு 10:50 மணிக்கு 07332 காரைக்குடி – ஹூப்ளி ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, துமகூரு ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட் உள்ளன.
Sorry, no posts matched your criteria.