Namakkal

News October 14, 2024

381 மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று மனுக்கள் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை போன்ற 381 மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக் கொண்டு அவர்களின் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

News October 14, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் வி.ஏ.ஓக்கள் தர்ணா

image

நாமக்கல் மாவட்டம் பெரியகவுண்டம்பாளையம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை அதே பகுதியைச்வ்சார்ந்த திருமுருகன் என்பவர் கடந்த 4ஆம் தேதி வெட்டியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட வி.ஏ.ஓ ராமன் என்பவரை திருமுருகன் தாக்கியதை கண்டித்தும் இதுவரை காவல்துறை கைது செய்யாததை கண்டித்தும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 350க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ மற்றும் வருவாய்த்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

News October 14, 2024

நாமக்கல்: முதல்வர் பயணம் திடீர் ரத்து

image

தமிழக முதலமைச்சர் வருகின்ற 16ஆம் தேதி நாமக்கல் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இருந்தது. அக்.16ஆம் தேதி காலை பரமத்தி சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இருந்தது. தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முதலமைச்சர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.

News October 14, 2024

பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கக் கோரி 160 விண்ணப்பங்கள்

image

நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம், வெடிபொருள் விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக். 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை வரை 160 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 14, 2024

இனிப்பு, கார வகைகள் தயாரிக்க உரிமம் பெற வேண்டும்

image

நாமக்கல் மாவட்ட முழுவதும் தற்காலிக தீபாவளி காரம் மற்றும் இனிப்பு கடை வைப்பவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறை மூலம் உரிமம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும் போது, இனிப்பு காரம் தயாரிக்கும் கடைகள் சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஈக்கள் தின்பண்டங்கள் மீது அமரக்கூடாது, கலப்படம் இன்றி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீர் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.114க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.6 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.120 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 5.05 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News October 14, 2024

கலப்படமற்ற இனிப்பு வகைகள் தயாரிக்க அறிவுறுத்தல்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நடைபெறுகிறது. ஹோட்டல்கள் பேக்கரிகள் (ம) தனியாக இணைப்பு (ம) காரம் தயாரிக்கும் இடங்களில் கலப்படம் இல்லாமல் திண்பண்டங்களை செய்ய வேண்டும் எனவும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மறுமுறை பயன்படுத்தக்கூடாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

தேசிய கல்வி உதவித் தொகை பெற விண்ணபிக்கலாம்

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https:/scholarshipsgov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்திலும் (http//socialjustice.gov.in) என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

image

குமாரபாளையத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைடுத்து குமாரபாளையம் போலீசார் இன்று தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காட்டூர் விட்டலபுரி பகுதியில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சசிகுமார், பிரபு, மணிகண்டன், நாகராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News October 13, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி, கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ.114க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும், முட்டை விலையை பொறுத்தவரையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாற்றம் இன்றி ரூ.5.05 காசுகளாக நீடித்து வருகிறது.