India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
தென்னிந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தற்போது அறிவித்துள்ள ஒப்பந்தத்தில் 21 டன் எடை ஏற்றும் 3 ஆக்ஸில்கள் கொண்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நியாயமான சில கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்க முன் வந்துள்ளது. எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக எல்.பி.ஜி சங்க தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் உத்தரவுப்படி, டி.எஸ்.பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்து கடந்த 28 ம் தேதி முதல் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் புகையிலை விற்பனை,பணம் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 71 பேர் கைது செய்யப்பட்டு 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. எனவே, வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். ▶ தாகம் எடுக்காவி்ட்டாலும் கூட, அடிக்கடி தண்ணீர், இளநீர், அருந்த வேண்டும். ▶ தேநீர், காபி, மது, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க சொந்தங்களுக்கு Share பண்ணுங்க.
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்.1 முதல் மாவட்ட விளையாட்டுப் பயிற்சித்திடலில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். நீச்சல் பயிற்சி 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1416 ஆகும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு – 8220310446 க்கு தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (29/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு – கிருஷ்ணன் (9498198444) ,வேலூர் – சங்கீதா (9498210142) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஓரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று 28ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 என இருந்த நிலையில், தற்போது 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோகனூர், ஒருவந்தூரில் வரலாற்று சிறப்புமிக்க பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாலையும், கழுத்துமாக வந்து அம்மனை வணங்குகின்றனர். இவ்வாலயத்தில் உப்பு மண்ணையே பிரசாத விபூதியாக பெற்று செல்கின்றனர். ஒருவரம் கேட்டால் பலவரம் கொடுப்பாள் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் என இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். SHARE IT!
Sorry, no posts matched your criteria.