Namakkal

News April 13, 2025

காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்ற அழைப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,300 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி (மோகனூர் சாலை) அல்லது 04286 – 292025 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 13, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலையிலும் கறிக்கோழி விலையில் ரூ.7 உயர்த்தி ரூ. 96 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.

News April 13, 2025

நாமக்கல்லில் கை வரிசை காட்டிய சர்வேயர் போலீஸ் பிடியில்!

image

திருச்செங்கோட்டைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவரது நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தருவதற்காக, சர்வேயர் பூபதி (36) என்பவர் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், லஞ்சம் வாங்க முயன்ற பூபதியை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News April 13, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (12/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன்(9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 12, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (12-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

News April 12, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று (ஏப்.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.96 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 12, 2025

பூர்வஜன்ம பாவம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!

image

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

News April 12, 2025

நாமக்கல்: கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வருமாறும், வரும் செவ்வாய்க்கிழமை 15.04.2025 காலை 9:00 மணி முதல் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்படுள்ளது.

News April 12, 2025

எட்டுக்கை தாயின் கருணை – குழந்தை வரம் நிச்சயம்!

image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள எட்டுக்கை மாரியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால், பூமி மட்டத்தில் இருந்து கீழ்நோக்கி பல படிகள் இறங்கி தான் செல்ல வேண்டும். குழந்தை வரத்தை கொடுப்பதில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் சூலத்தில் காகிதம் அல்லது உலோகத் தகட்டில் வேண்டுதல்களை எழுதி கட்டி வைத்தால் வேண்டுதல் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

News April 12, 2025

வெண்ணந்தூர் பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் , வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தனசேகரன் (வயது 50) நேற்று பழந்தின்னிப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர் தனசேகரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!