India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமத்தி வேலூர் அருகே பொய்யேரி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார். இவர் தனது மகனுடன் நேற்று இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென செந்திலுமார் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 5,517 பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 28 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2,376 பேருக்கும், 2022-23-ம் ஆண்டில் 21 முகாம்களில் 1,480 பேருக்கும், 2023-24 – ஆண்டில் 15 முகாம்களில் 1,661 பேருக்கு என 5,517 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 நபர்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதார துறை மூலம் தேசிய குடற்புழு நீக்க முகாம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு 30.08.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
➤நாமக்கலில் கல்லூரி மாணவி பானுப்பிரியா மர்ம மரணம்.
➤பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்
➤நாமக்கல் பூங்கா சாலையில் புதிய பூங்கா திறப்பு
➤நாமக்கலில் முட்டை விலை பத்து காசு குறைந்து 4.40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
➤கொல்லிமலையில் அரசு தாலுக்கா மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்
➤மல்லசமுத்திரத்தில் ரூ.38 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில் 21ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு விபரம் மங்களபுரம் 35 மிமீ, ராசிபுரம் 3.20 மிமீ, சேந்தமங்கலம் 1மிமீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 3 மிமீ, கொல்லிமலை செம்மேடு 19 மிமீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 61.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்றது முதல் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், உடனடியாக அவற்றை நிறைவேற்றக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவரவேண்டும் என்பதே முக்கியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் மூன்றாவது நிர்வாக குழு கூட்டம், மத்திய கூட்டுறவு வங்கியின் வட்டார அலுவலகத்தில் நேற்று எம்பி ராஜேஷ்குமார்
தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ப.அருளரசு முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மண்டல துணை பதிவாளர் ஜேசுதாஸ், திருச்செங்கோடு துணை பதிவாளர் நாகராஜன் மற்றும் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கலில் கல்லூரி மாணவி பானுப்பிரியா மர்ம முறையில் வீட்டில் நேற்று இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க காலணியில் வாடகைக்க வீடு எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், அப்பெண் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல்லில் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. நாமக்கல் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 116 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
➤நாமக்கல்லில் முட்டை விலை 10 காசு குறைந்து ஒரு முட்டை விலை ரூ4.50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
➤மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்
➤மல்லூர் பகுதியில் நாளை மின் தடை
➤நாமக்கல் மாவட்டத்தில் ஒண்டிவீரன் மற்றும் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.