Namakkal

News June 24, 2024

நாமக்கல்: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று 24ஆம் தேதி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா கலந்து கொண்டு பல்வேறு தரப்பினரிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆனி மாத திங்கட்கிழமை முன்னிட்டு இன்று 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால் தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்கக் கவசம் சாற்றப்பட்டு வெட்டிவேர் மாலை அணிவித்து மகாதீபம் காண்பிக்கப்பட்டது. பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

News June 24, 2024

நாமக்கல்லில் இரத்த தானம்.. சான்றிதழ் வழங்கல்

image

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாம் நடத்தப்பட்டு இரத்தம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரத்த தானம் வழங்கிய 44 கொடையாளர்களுக்கு, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News June 24, 2024

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் வேண்டி நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

News June 24, 2024

தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி

image

சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்துக்கொள்ள அதன் நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

வரும் 26-ல் ‘நீங்களும் தொழில் தொடங்கலாம்’ நிகழ்ச்சி

image

சர்வதேச சிறு குறு நடுத்தர தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தைச் சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வரும் 26ஆம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் ‘நீங்களும் தொழில் தொடங்கலாம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொழில் முனைவோராக விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News June 23, 2024

கூகுள் மேப் காட்டிய வழியில் சாக்கடைக்குள் விழுந்த கார்

image

ராசிபுரத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்தாரை அழைத்து செல்ல வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பவர் காரை google மேப் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் புதிய பேருந்து நிலையும் பின்புறம் தட்டாங்குட்டை வழியாக செல்லும் பொழுது சாக்கடைக்குள் தவறி விழுந்தது. இதில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

News June 23, 2024

நாமக்கல்லில் புதிய ரேசன் கடை திறப்பு

image

 மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் இன்று (ஜூன் 23) நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகக் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News June 23, 2024

நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நாளை(ஜூன் 24) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

20 நாட்களில் மாநகராட்சியாக மாறவிருக்கும் நாமக்கல்

image

 அடுத்த 20 நாட்களில் தமிழகத்தில் 4-புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N நேரு நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் நாமக்கல் நகராட்சி உட்பட நான்கு நகராட்சி இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பானது மக்கள் நலத்திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைய ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்.

error: Content is protected !!