Namakkal

News June 25, 2024

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதல் பேரவை கூட்டம்

image

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் இராஜேஸ்குமார் தலைமையில் இன்று(ஜூன் 25) நாமக்கல் மாவட்டம் நளா ஹோட்டலில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதல் பொது பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவரும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் செயலாட்சியர் மரு ச.உமா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

News June 25, 2024

இழப்பீட்டுத் தொகை திரும்பபெற ஆட்சியரிடம் மனு

image

கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெற வலியுறுத்தி அக்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவராஜின் தாய் ரத்தினம் நாமக்கல் ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்பு கொலைக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. இத்தொகையை திரும்ப பெற கடந்த ஏப்ரல்15ல் எனது மகன் எழுத்துப்பூர்வமாக மனு அளித்தும் இதுவரை மனு மீது நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

 தியாகிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுதாரா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சுதந்திர போராட்ட வீரர்கள் , வாரிசுகள் என அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

ரூ. 5.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 5.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா நேற்று வழங்கினாா். இந்தக் கூட்டத்தில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 571 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.

News June 25, 2024

அத்தனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் அப்பகுதியில் ஆய்வு நடத்தி வரும் நிலையில், இதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலா் கலாநிதி தெரிவித்துள்ளாா் .

News June 25, 2024

நாமக்கல்லில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்லும்

image

மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் நாமக்கல்லில் நாளை(ஜூன் 26) முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள், தொழில்முனைவோா்கள் , இளைஞா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News June 24, 2024

நாமக்கல்: உண்ணாவிரத போராட்டம் 

image

நாமக்கல் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்
ந.வேலுசாமி சிஐடியு மாவட்ட செயலாளர், துவக்க சிறப்புரையாற்றினார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை குறித்து உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

News June 24, 2024

கூட்டத்திற்கு அழைப்பு வழங்கிய மாநிலங்களவை எம்பி

image

நாமக்கல் மாநிலங்களவை எம்பியும் ,நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை அமைப்பாளருமான ராஜேஷ் குமார், அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, நாமக்கல்லில் நடைபெற உள்ள பொது பேரவை கூட்டத் தொடக்க தீர்மானங்கள் அடங்கிய புத்தகத்தை வழங்கி ,கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தார்.

News June 24, 2024

571 கோரிக்கை மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கல்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 571 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

News June 24, 2024

இராசிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்

image

நாமக்கல், இராசிபுரம் அடுத்துள்ள தேங்கல்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் இரவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் கூறிய நிலையில் இதுகுறித்து விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை நேற்று இரவு மற்றும் இன்றும் ஆராய கால் பதித்த தடங்கள் ஆய்வு செய்தும் சிசிடிவிகளையும் ஆராய்ந்து வருகின்றர்.

error: Content is protected !!