India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சத்திரத்தில் 1.20 மி.மீ மழை, ராசிபுரத்தில் 2 மி.மீ, சேந்தமங்கலத்தில் 1.00 மி.மீ திருச்செங்கோட்டில் 2.00 மி.மீ, கொல்லிமலை செம்மேட்டில் 3.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ அல்லது -1 ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம் நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நாமக்கல் வேளாண் இணை இயக்குநர் கவிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நாமக்கல் விவசாயிகள் தற்போது நிலக்கடலை சாகுபடியை தொடங்கியுள்ளனர். இதற்கு பயன்படும் டி.ஏ.பி உரத்தின் மூலப்பொருட்களின் விலை, உலக சந்தையில் அதிகம் உள்ளதால், அதன் உற்பத்தி போதிய அளவில் இல்லை. இதற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தினால் செலவை குறைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் கடும் வெப்பம் நிலவுவதால் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. அதனால் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் நாள்தோறும் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அவை பாதிக்கப்பட்டுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 19.07.24 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் போட்டித் தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு ஏதுவாக கடந்த 05.01.24 முதல் அறிவுசார்மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு கொண்டுள்ளன. அங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும் இம்மையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டு கொண்டுள்ளார்.
சேந்தமங்கலம் வெட்டுக்காடு அரசு கலைக்கல்லூரியில் ரூ.3.52 கோடி நிதியில் புதிதாக கட்டப்பட்ட 8 ஆய்வக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியில் முதல்வர் பாரதி தலைமை வகித்தார். இதில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய ஆய்வகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19 நடைபெற உள்ளது. ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக் குறிப்பில் காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் தனியார் நிறுவனங்கள் தங்களது நிர்வாகிகளை கொண்டு ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும் மேலும் விபரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.