India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், செங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை எம்பி ராஜேஸ்குமார் வழங்கினார். உடன் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்முருகன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிகள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாமக்கல் மாவட்ட அலகில் செயல்பாட்டில் இருந்த TN 28G 6699, TN 28 G 7799, TN 28G 0194, TN 28G 0222 ஆகிய வாகனங்கள் வரும் ஆகஸ்ட்.20 அன்று ஏலம் விடப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த மேலும், விவரங்களுக்கு 9445008144 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கீழ்காணும் வனச்சரகங்களில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் தேவைப்படுவோர் உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதன்படி, இராசிபுரம்-8883985972, நாமக்கல்-9942062486, சேந்தமங்கலம்-9344364987, பரமத்திவேலூர்-9842702859, கொல்லிமலை-8870114906, குமாரபாளையம்-7550195814, மோகனூர்-9942062486 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மரங்களை பெறலாம்.
இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி அறியும் வகையில் சென்னை ஹுமாயூன் மஹாலில் 8000 ச.அடியில் பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்துக்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களுக்கு 1945ல் வழங்கப்பட்ட வெள்ளிப்பேழை , வாழ்த்துப்பட்டயத்தை அவரது பேரன் முனைவர். பழனியப்பன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் அவர்களை சந்தித்து நன்கொடையாக ஒப்படைத்தார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அதில் விவசாயத்திற்கு தனி யூனியன் பட்ஜெட் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உள்ளிட்ட, விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளை, பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 24 ஆம் தேி காலை 10 மணிக்கு “திலேப்பியா மீன் வளர்ப்பு” குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊராக மகளிர் மற்றுமம் இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். மேலும், பயிற்சிக்கு முன் பதிவு கட்டாயம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் இன்று தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கர்நாடகா, உத்தரகன்னடாவில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில், டேங்கர் லாரியுடன் சிக்கிய நாமக்கல், ராசிப்புரத்தை முருகன் மற்றும் சின்னண்ணண் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இருவரின் உடலும் மீட்கப்பட்டது. மேலும், இவர்களுடன் தருமபுரியை சேர்ந்த மற்றொரு முருகனும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Sorry, no posts matched your criteria.