India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேட்டூர் அணை 100 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதை அடுத்து இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட உள்ளதால், காவிரி கரையோரப் பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் காவேரி நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
இன்று அத்தனூர் பேரூராட்சி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையும், புதிய 7 புறநகர் பேருந்துகள் மற்றும் 3 புதிய நகர்புற பேருத்துகள் என மொத்தம் 10 புதிய வழித்தட பேருத்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார், முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பாரதிய ஜனதாவின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூரில் நாளை மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொள்ள உள்ளார். மேலும் மாநில துணைத்தலைவர்கள் ராமலிங்கம், துரைசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். Share It
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரளி மஞ்சள் ரூ.12,203 முதல் ரூ.17,633 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.11,336 முதல் ரூ.15,355 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 8,712 முதல் ரூ. 15,009 வரையிலும் ஏலம் போனது. மேலும் 1,350 மூட்டை மஞ்சள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் போனது. இது கடந்த வாரத்தை அதிக விலைக்கு விற்பனையானது.
நாமக்கல் இராசிபுரம் நகராட்சியில், 2வது வார்டு, EB காலனியில் நேற்று ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், எம்.பி.இராஜேஸ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் நகராட்சி தலைவர் கவிதா உள்ளிட்டோர் இருந்தனர்.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் வக்ஃப் வாரிய நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. ரூ.25000 அல்லது வாங்கும் வாகனத்தின் விலையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது . தகுதிவாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் நாமக்கல் பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்த மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த திருச்சி லால்குடியை சேர்ந்த மாணவர் ஜெனிட்டோ என்பவர் கல்லூரி விடுதியில் நைலான் கயிறு மூலம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ மாணவர் தற்கொலை தமிழகத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை ஐடி ஊழியர் செந்தில்குமார் என்பவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த அப்பகுதியை சேர்ந்த தங்கராசு, முத்துவேலுவுக்கு அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் செந்தில்குமார் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது
இந்தியா முழுவதும் தற்போது முட்டை விலை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஹைதராபாத் மண்டலத்தில் இரண்டு முறை கொள்முதல் விலையை குறைத்தது உள்ளிட்ட பல்வேறு சூழலை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முட்டை விலை ரூ.5.20ல் இருந்து 30 காசு குறைத்து ரூ.4.90 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சரிவு இரண்டு வாரத்துக்கு பின்னர் சீராகும் என கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட வேளாண் துறையின் கீழ் செயல்படும் நடமாடும் மண் பரிசோதனை வாகனம், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்கிறது. இந்த வாகனம் 7ஆம் தேதி தேவனாங்குறிச்சியிலும், 14ஆம் தேதி அலவாய்ப்பட்டியிலும், 21ஆம் தேதி பேளுக்குறிச்சியிலும், 28ஆம் தேதி அகரத்திலும் ஆய்வில் ஈடுபடுகிறது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.