Namakkal

News August 12, 2024

நாமக்கல் இன்றைய முக்கிய செய்திகள்

image

#நாமக்கல் நகராட்சி இன்றிலிருந்து மாநகராட்சியாக செயல்படுகிறது.
#நாமக்கல் மாநகராட்சி மேயராக கலாநிதியும், துணை மேயராக பூபதியும் பொறுப்பு வகித்தனர்.
#செல்லப்பம்பட்டியில் விபத்தில் சிக்கிய கார்- 3 பேர் படுகாயம்
#வெண்ணந்தூர் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளபெருக்கு
#நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைப்பெற்றது.

News August 12, 2024

நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி

image

நாமக்கல் மாநகராட்சியாக மேயர் து.கலாநிதி பி.எஸ்.சி.,டி.டி.இ., பட்டம் பெற்றவர். நாமக்கலில் உள்ள ஜெயநகரில் வசித்து வரும் இவர் திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளராகவும், 2022ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்.பின்பு நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நாமக்கல் மாநகரின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ளார்.

News August 12, 2024

நாமக்கல் மாநகராட்சி ஆணையை பெற்ற மேயர்

image

நாமக்கல் மாநகராட்சியாக ஆனதை அடுத்து அதன் அரசு ஆணையை நாமக்கல் மேயர் கலாநிதி மற்றும் துணை மேயர் பூபதி மற்றும் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தமிழக அரசு வழங்கிய ஆணையை பெற்றுக் கொண்டனர். இதனால் நாமக்கல் நகராட்சி இன்று முதல் மாநகராட்சியாக மாறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாமக்கல் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாநகராட்சி உள்ள வார்டு உறுப்பினர்கள் கொண்டாடினர்.

News August 12, 2024

உதயமானது நாமக்கல் மாநகராட்சி: தொடங்கி வைத்தார் முதல்வர்

image

நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மாநகராட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

News August 12, 2024

நாமக்கல்: வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும்

image

நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து வரிகளும் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 24 – 25 ஆண்டுக்கான காலாண்டு வரியை செலுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

News August 11, 2024

நாமக்கல் நகராட்சி நாளை முதல் மாநகராட்சி

image

நாமக்கல் மாவட்டம் 1.1.1997 ஆம் ஆண்டு முதல் சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1988 முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்த நாமக்கல், கடந்த மாதத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். எனவே நாளை முதல் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக இயங்க உள்ளது. இந்த மாநகராட்சியில் கூடுதலாக 12 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

News August 11, 2024

நாமக்கல்: சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

image

சுதந்திர தின விழா வரும் வியாழக்கிழமை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், அன்று காலை 8 மணிக்கு ஆட்சியர் ச.உமா தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்கான நாமக்கல் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை, மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் நேற்று நடைபெற்றது.

News August 11, 2024

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே, கறிக்கோழி விலை கிலோ ரூ.85 ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.82 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News August 11, 2024

நாமக்கல்லில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உட்பட ஊராட்சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

News August 10, 2024

நாமக்கல் தலைப்பு செய்திகள்

image

➤நாமக்கல் வழியே வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்
➤நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆக.13 மரவள்ளி கிழங்கு குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.
➤ நாமக்கல் மாவட்டத்தில் காலை 6மணி வரை 90.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
➤நாமக்கல்‌ கவிஞர்‌ ராமலிங்கம்‌ அரசு பெண்கள்‌ கலைக்கல்லூரியில்‌ 175 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➤நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அலங்காரம்.

error: Content is protected !!