India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே சப்பையாபுரம் பகுதியில் 7 ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழில் செய்யும் இளைஞர் மீது பெற்றோர் புகார் கொடுத்தனர் . அந்த இளைஞரை உடனடியாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், நாளை பிப்ரவரி 19-ம் தேதி புதன்கிழமை மின் தடை அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. இந்நிலையில், மின் நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. வழக்கம் போல் மின்சாரம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (18/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள இறைவனை இரவில் யாரும் இல்லாத சமயம் பாம்பு வந்து இறைவனை பூஜித்து போவதாக கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு நாகதோஷம் உள்ளவர்கள் வந்து வழிபட்டால் நாகதோஷம் அகலும் என்று கூறப்படுகிறது. இக்கோயில் சிறப்பினை அறிந்து வழிபடுங்கள் மற்றவர்களும் ஷேர் செய்யுங்கள் மக்களே.

காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்கள் படைப்பணியின் போது உயிர் இழந்த படைவீரர்களின் விதவையர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் பெறலாம். இது தொடர்பாக வரும் 20ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 55 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்கு கூட்டம் நாமக்கல்லில் இன்று 17ந் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 4.65 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ4.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (17/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சவிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செங்கோடு மாசிக்குண்டம் திருவிழா மாசி 16 பூச்சாட்டுதலுடன் நடைபெற உள்ளது. மாசி 27 இல் நடைபெறும் மகா குண்டம் இறங்கும் விழாவில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி , குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய்நொடிகள் தீரவும் , கடன் தீரவும் நேர்த்தி கடன் செலுத்துவதாக வேண்டி குண்டம் இறங்கினால் அனைத்தும் நிறைவேறும் எனவே தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் மக்களே
Sorry, no posts matched your criteria.