India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் 2ஆம் நாள் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.நாமக்கல்லில் வாத்துக் கறி விலை உயர்வு
3.நாமக்கல் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கொண்டிசெட்டிபட்டி காலனியிலும், அர்த்தனாரி பள்ளி தெருவிலும் நாளை நடைபெறுகிறது.
4.நாமக்கல் நகரில் பகுதிகளில் பரவலாக மழை
5. வரும் 9ம் தேதிசிபிஎம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று கூடியது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று 2ம் தேதியும் இதே ரூ 5.40 என்ற விலையே தொடர்ந்து நீடிக்கிறது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டை நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் இதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), இராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – இந்திராணி (9498169033) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, நாளை 4/11/2024 திங்கட்கிழமை காலை 9:30 மணியளவில் வார்டு எண் 39 கொண்டிசெட்டிபட்டி காலனியிலும், காலை 11 மணியளவில் வார்டு எண் 36 அர்த்தனாரி பள்ளி தெருவிலும் நாமக்கல் மாநகராட்சி மூலம் நடைபெறும் முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஐப்பசி மாத ஞாயிற்றுக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: குமாரபாளையம் 2 மிமீ, மங்களபுரம் 19 மிமீ, நாமக்கல் 3 மிமீ, புதுச்சத்திரம் 15 மிமீ, ராசிபுரம் 31.60 மிமீ, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 28 மிமீ, கொல்லிமலை செம்மேடு 1 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 99.60 மிமீ மழை பதிவாகி உள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 மி.மீ.யும், நாளை (திங்கட்கிழமை) 15 மி.மீ.யும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 5-ஆம் தேதி 7 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் 6-ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்தனர். எனவே, கறிக்கோழி விலை கிலோ ரூ.98 ஆக சரிவடைந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.40 காசுகளாக நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகளப்போட்டி நடந்தது. இதில் நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்வர் சீனியர் பிரிவில், தொடர் ஓட்டத்தில் 3ம் இடம் பெற்றனர். நீளம் தாண்டுதலில் சூப்பர் சீனியர் பிரிவில், 12ம் வகுப்பு மாணவி தேன்மொழி 2ம் இடம், சீனியர் பிரிவில் ஸ்ருதிகா, 200 மீட்டர் ஓட்டத்தில் 3ம் இடம், உயரம் தாண்டுதலில் 2ம் இடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
1.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2.நாமக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள் நடைபெற்றது.
3.பலப்பட்டரை மாரியம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்
4.ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை
5.தீபாவளி பண்டிகையில் நாமக்கல் மாவட்ட முழுவதும் 38 பேர் மீது வழக்கு பதிவானது.
Sorry, no posts matched your criteria.