Namakkal

News March 3, 2025

நாமக்கல் போஸ்ட் ஆபீஸில் வேலை..இன்றே கடைசி நாள்

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாமக்கல்லில் மட்டும் 73 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 3, 2025

18,461 மாணவர், மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்

image

நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை 18461 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வு பணியை கண்காணிக்க 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், நான்கு கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை விழிப்புணர்வு வழித்தட அலுவலர்கள்,24 பேர் வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள் 3 பேர் மற்றும் அரை கண்காணிப்பாளர் 1,260 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குழுக்கள் முறைப்படி பணி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

News March 2, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் நான்கு ரோந்து அதிகாரிகள் எஸ்பியால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்றைய அதிகாரிகள் விவரம்: நாமக்கல் பகுதியில் யுவராஜன் 9498177803, ராசிபுரம் பகுதியில் ஆனந்த் குமார் 9498106533, திருச்செங்கோடு பகுதியில் தவமணி 9443736199, வேலூர் பகுதியில் ராமகிருஷ்ணன் 9498168464 காவல் அதிகாரிகள் இன்று இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர்.

News March 2, 2025

கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.18 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.18 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.102ஆக ஆனது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு, முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாகவும் இருந்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News March 2, 2025

நாமக்கல் மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது?

image

முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாமக்கல் “முட்டை நகரம்” என அழைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் நாமக்கல்லுக்கு “நாமக்கல்” என பெயர் எப்படி வந்தது. இவ்வூரின் பழைய பெயர் “ஆரைக்கல்” என கூறுகின்றனர். மேலும், “நாமகிரி” என்ற பெயரிலிருந்து நாமக்கல் என உருவானதாகவும் என்கின்றனர். நாமக்கல் மாவட்ட மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது என கமெண்ட் பண்ணுங்க.

News March 1, 2025

நாமக்கல் ; இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 1, 2025

நாமக்கல்: பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்

image

நாமக்கல் ஆட்சித்தலைவர் ச.உமா இன்று (01.03.2025) நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏ.கே.சமுத்திரம், பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.

News March 1, 2025

தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்க கவசசிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News March 1, 2025

முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எம்பி 

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் பி ராஜேஷ்குமார் தனது இணையதள பக்கத்தில் மக்கள் போற்றும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

குடிசை வீடு தீ விபத்தில் முதியவர் பலி

image

நாமக்கல் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள ஆவரங்காட்டு புதூரைச் சேர்ந்தவர் ரங்கன்(80). உடல் நல முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். நேற்று முன்தினம் இவரது மனைவி வீராயி சமைப்பதற்காக விறகடுப்பில் தீ பற்றிய போது ரங்கன் படுத்திருந்த வீடு குடிசை வீட்டில் தீப்பற்றியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!