Namakkal

News August 24, 2024

நாமக்கல்லில் அகற்றப்பட்ட போஸ்டர்கள்

image

நாமக்கல் மாநகராட்சியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூகம் ஒவ்வொரு மாதமும் 2, 4வது சனிக்கிழமையில், நகரின் பல்வேறு இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பேருந்து நிலையம், பூங்கா ரோடு ஆகிய இடங்களில் உள்ள பொதுச்சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

News August 24, 2024

நாமக்கல்: மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 

image

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். மேலும், பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் 2041 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.

News August 24, 2024

நாமக்கல்லில் மாணவர் மரணம்: உறவினர்கள் வாக்குவாதம்

image

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News August 24, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் 

image

ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று 11 மணி அளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என பலவகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

News August 24, 2024

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

image

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

News August 24, 2024

நாமக்கல் கல்வி அலுவலர் விசாரணை

image

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் நேற்று +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ் (16), ரித்திஷ்(16)) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதை அடுத்து இன்று வரகூர் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

News August 24, 2024

பட்டுக்கூடு 264 கிலோ ரூ.1.28 கோடிக்கு ஏலம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, நேற்று நடந்த ஏலத்தில், 264.5 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 518 ரூபாய், குறைந்தபட்சம், 473 ரூபாய், சராசரி, 483.88 ரூபாய் என, 1.28 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News August 23, 2024

நாமக்கல் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தகராறில் ஒருவர் உயிரிழப்பு
➤வையப்பமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
➤நாமக்கல்லில் மாறாத முட்டை விலை ரூ4.40 விற்பனை
➤திருமலைப்பட்டியில் தடகளப் போட்டி தொடங்கி வைத்த எம் பி
➤சேந்தமங்கலத்தில் ஆகஸ்ட் 25யில் ரத்ததான முகாம்
➤சிங்களாந்தபுரத்தில் மனுக்களை பெற்ற வனத்துறை அமைச்சர்
➤மோகனூர் குறிக்கார கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேகம்

News August 23, 2024

நாமக்கல்லில் மாணவர்கள் தகராறில் ஒருவர் உயிரிழப்பு

image

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ் (16), ரித்திஷ்(16)) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் படுகாயமடைந்து. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 23, 2024

நாமக்கல் மக்கள் ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் அறிவுரை

image

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விடுபட்டுள்ள வாக்காளர்கள் மற்றும் 17 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!