India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள கோழி கறிக்கடையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை நடப்பதாக நேற்று சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, கடைக்கு சீல் வைத்தனர். மேலும், மது விற்பனை செய்து வந்த பெண்ணையும், நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர் அருகே நல்லூர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. அங்கு செம்மடை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் வந்திருந்தார். கும்பாபிஷேக விழா நடைபெற்றிருக்கும்போது, லட்சுமி கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்க நகை காணவில்லை என போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், 4 பெண்கள், ஒரு ஆண் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. ஆவணி மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று மாலை தங்க தேரில் வெள்ளி கவச அலங்காரத்தில் உற்சவ ஆஞ்சநேயர் கோவில் உள்புறப்பாட்டில் பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் நாமக்கல் ஆஞ்சநேயரையும் தங்க தேரில் எழுந்தருள உற்சவ ஆஞ்சநேயரையும் தரிசனம் பெற்றுச் சென்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை பரமத்தி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் துறையின் சார்பில் 400 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 158 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வேளாண்மை மற்றும் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான மேளா மற்றும் கண்காட்சி ஆட்சியர் உமா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் (45). இவரது மனைவி பிரியா (38). கபிலன் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா கணவரை பிரிந்து, வேலூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த, கபிலன் கடந்த 23ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 03.09.2024 முதல் 09.09.2024 வரை ‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் 5 நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள அனைவரும் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 9787788005 மற்றும் 9597746373 என்ற எண்களுக்கோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய், கனி, பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.48, தக்காளி ரூ.20, வெண்டை ரூ.24, அவரை ரூ.60, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.45, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.24. இதனிடையே நேற்று 29ஆம் தேதி ஒரு கிலோ கேரட் ரூ112க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 30ஆம் தேதி ரூ4 விலை உயர்ந்து ஒரு கிலோ கேரட் ரூ116க்கு விற்பனை செய்யப்பட்டது
திருக்குறள் முற்றோதல் போட்டி நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். 04286-292164 எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காந்திபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார். தறிப்பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நாமக்கல் விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பானது. அப்போது அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.