Namakkal

News March 16, 2025

அடையாள எண் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் நாமக்கல் மாவட்டத்தில் உடனடியாக தங்களுடைய கணினி பட்டா, ஆதார், கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தினை அணுகி மார்ச் 31-க்குள் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

நாமக்கல்லில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்

image

ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் நாமக்கல்லில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற கோயில்கள்.▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் ▶️ அர்த்தநாரீஸ்வரர் கோயில், (திருச்செங்கோடு)▶️சுவாமி வெங்கடாஜலபதி கோயில் (நைனா மலை) ▶️ அரபாலீஸ்வரர் கோயில் (நாமக்கல்) ▶️ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (கபிலர்மலை) ▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில் (காளிப்பட்டி) ▶️ கொல்லிமலை எட்டுக்கை அம்மன்

News March 16, 2025

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் பல ஆயிரம் பணியிடங்கள் நிரப்படவுள்ளனர். எனவே 10-ம் வகுப்பு, பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிகிரி உள்பட பல்வேறு கல்வித் தகுதி உள்ளோரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (15/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 15, 2025

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, ராசிபுரத்தை அடுத்த மங்களபுரம் பகுதியில் நாளை (16.03.2025) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் மங்களபுரம், தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 700 காளைகளும், 300 வீரர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.

News March 15, 2025

90 வயது மூதாட்டி மர்ம மரணம்: 1 பவுன் நகை மாயம் 

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரகாரம் பகுதியில் தனியே வசித்து வந்தவர் சரஸ்வதி (90). இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீடு திறக்கப்படாததால், அவருடைய பேரன் கதவை திறந்து பார்த்தபோது, அவர் மூக்கு காது பகுதியில், ரத்த காயங்களுடன் சடலமாக இறந்து கிடந்தார். மேலும், அவர் காதில் அணிந்திருந்த 1 பவுன் நகை மாயமாகி இருந்தது. இந்நிலையில், பள்ளிபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

News March 15, 2025

நாமக்கல்: பெண் குழந்தைகளுக்கு கை கொடுக்கும் திட்டம்

image

நாமக்கல், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 15, 2025

மாணவர் கொலை: தலைமை ஆசிரியர் உள்பட இருவர் பணி இடமாற்றம்

image

நாமக்கல், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 26-ந் தேதி இரு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை, போலீசார் காப்பகத்தில் அடைத்தனர்.இந்தநிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வரதராஜ், செல்லப்பம்பட்டிக்கும், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திரன், சித்தாளந்தூருக்கும் பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.

News March 15, 2025

நாமக்கல் கறிக்கோழி விலை சர்ருனு ஏறிடுச்சு!

image

நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் கறிக்கோழி கிலோ ரூ.95க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.4 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.99 ஆனது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2வது நாளாக ரூ.5 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.104-ஆக உயர்ந்தது.

News March 14, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விவரம் வெளியிடப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று (14.03.2025) நாமக்கல் -சாந்தகுமார் (94 981 6 7 680), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு வெங்கட்ராமன் (9498172040), மற்றும் வேலூர் சபிதா (9442215201) ஆகியோர் இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!