India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை பாவடி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் பாண்டமங்கலம் மின் வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு பவித்ரா (27) என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் நேற்று, கார்த்திகேயன் பூசாரிபாளையத்தில் மின் இணைப்பை சரி செய்து கொண்டு இருக்கும் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (17/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நேற்று முன்தினம் சரஸ்வதி என்ற 90 வயது மூதாட்டியை கொடூரமாக கொன்ற, அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், கோகுல்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இருவரும், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் தங்கத் தோடினை பறிக்க முயன்று, வலியால் கத்திய அவரை முகம், மார்பில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டம் சிறப்பு முகாம் மூலம் 6 மாதம் முதல் 5வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், தேசிய அளவில் வைட்டமின்-ஏ குறைபாடு தடுப்புமுகாம் வரும் 17ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது. அங்கன்வாடி மையங்களில் வைத்து வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும். மொத்தம் 1,04,113 குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

நாமக்கல்லில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாமக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் 17235 SMVT பெங்களூரூ – நாகர்கோவில் ரயிலை பயன்படுத்தி எளிதாக செல்லலாம். தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:20 மணிக்குள் நாகர்கோவில் சென்றடையும்.

நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியது. பல்வேறு நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தொழில் அதிபர் ஸ்ரீதேவிமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன்(20). நேற்று முன்தினம் தமிழரசன் ப.வேலூரிலிருந்து பாண்டமங்கலம் நோக்கி தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பொத்தனூரில் தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் தமிழரசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், தமிழரசனும், மற்றொரு டூவீலரில் வந்த இளைஞரும் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (16/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த வாரங்களில் ஒரு முட்டை விலை ரூ.3.80 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.