India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் போலி மதுபானம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மது பாட்டில் மீது ஒட்டப்படும் ஹாலோகிராம் லேபிள் அடித்து தரும் நபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் (41) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசு பள்ளி சமையலறை கதவு பகுதியில் மனித மலம் பூசிய விவகாரத்தில் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே நாமக்கல் To சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தாளம்பள்ளம் என்ற இடத்தில் சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்று அத்தனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சாலையை கடந்த போது முசிறியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஆட்டோ மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
நாமக்கல் மாநகராட்சியில் இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மற்றும் உட்கோட்டம் பகுதிகளான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, வேலூர் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு அம்பேத்கர் நகர் அரசு துவக்கப்பள்ளியில், கடந்த ஞாயிறன்று பள்ளியில் அசுத்தம் செய்த சமூக விரோதிகளை காவல்துறை கைது செய்திடவும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். பள்ளி பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்து குடும்ப அட்டை இல்லாதவர்கள் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகங்களில் இதற்கான உரிய படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ச.உமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் இராஜேஸ்குமார் தலைமையில்
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவைக் கூட்டம் இன்று நாமக்கல் மாநகராட்சி கட்டிடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
நாமக்கல் நகர ஷராப் & நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நிர்ணயம் செய்யப்பட்ட இன்றைய (05.09.2024) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.53360 ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.6670 முத்திரை காசு 1 பவுன் ரூ.54400 முத்திரை காசு 1 கிராம் ரூ.6800 ஒரு கிராம் வெள்ளியின் விலை: ரூ.90க்கும் விற்பனை ஆகி வருகின்றது. சேதாரம், கூலி, GST வரி தனி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இங்கு இன்று 11 மணி அளவில் பலவகை வாசனை திரவியங்கள் கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின், முதுகலை தமிழாசிரியர் நந்தக்குமார் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கு அரசு பள்ளி மாணவர்களின் பள்ளிச்சீருடையில் வந்திருந்தார். இதனை பார்த்த மாணவ மாணவிகள் ஆசிரியரின் நெகிழ்ந்து போனார்கள். மற்ற ஆசிரியர்களும் ஆசிரியர் நந்தகுமாரை பாராட்டினர்.
Sorry, no posts matched your criteria.