Namakkal

News September 7, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 763 விநாயகர் சிலைகள்

image

நாமக்கல் எஸ்பி நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது “நாமக்கல் மாவட்டம் முழுதும் 763 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உரிய உரிமம் பெற்று வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிலைகள் அனைத்தும் வரும் 12ஆம் தேதி முதல் கரைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

பொறியாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சத்திநாயக்கன்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமியை கழுத்தறுத்து படுகொலை செய்த பொறியாளர் செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உள்ள நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது .

News September 6, 2024

நாமக்கல் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாநகராட்சியில் இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மற்றும் உட்கோட்டம் பகுதிகளான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, வேலூர் பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News September 6, 2024

ஆண்டகளூர்கேட் அருகே வாகன விபத்து

image

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே நாமக்கல் To சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர்கேட் அருகே இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த தலைவாசல் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News September 6, 2024

விநாயகர் சதுர்த்தி எம்எல்ஏ வாழ்த்து

image

விநாயகர் பெருமானுக்கு புதிதாக சிலையை உருவாக்கி அதை கோவில்களில் வைத்து வழிபட்டு மூன்று அல்லது ஐந்து தினங்கள் கழித்து ஆறுகள் மற்றும் கடல்களில் சிலையை கரைத்து கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி விழா. சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வாழ்த்து கூறினார்.

News September 6, 2024

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மத்திய அரசு அறிவிப்பின்படி விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 10ம் தேதி பள்ளிபாளையம், ஆவாரங்காடு நகராட்சி சமுதாயகூடத்திலும்
11ம் தேதி பரமத்தி வேலூர் கவுண்டம்பாளையத்திலும் நடைபெற உள்ளது பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார். 

News September 6, 2024

அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை – ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அரசு பள்ளி சமையலறை கூடத்தில் மனித மலம் பூசிய வழக்கில் துரைமுருகன் என்பது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா எச்சரித்துள்ளார்.

News September 6, 2024

போலீஸ் கேண்டீனில் பொருட்கள் வாங்க அனுமதி

image

ராணுவம், காவல் துறையினருக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகை விலையில் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்துவருகிறது. மாவட்ட தலைநகரங்களில் இதற்கான கேண்டீன்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் போலீஸ் கேண்டீனில், ஊர்க்காவல் படையினரும் பொருட்கள் வாங்கிக்கொள்ள நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் எஸ்பி ராஜேஸ் கண்ணன் அதற்கான பிரத்யேக அட்டைகளை வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.

News September 6, 2024

நாமக்கல்லில் காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்: கத்தரி ரூ.54, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.18, அவரை ரூ.75, கொத்தவரை ரூ.26, முருங்கை ரூ.45, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.38, பீர்க்கன் ரூ.36, வாழைக்காய் மற்றும் ரூ.30. இதனியிடயே நேற்று ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.5 உயர்ந்து, ரூ45.க்கு விற்பனை செய்யப்பட்டது.

News September 6, 2024

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

image

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” நாமக்கல் மாநகராட்சி பகுதியில் அதிக அளவு மழை நீர் தேங்கும் இடங்கள் மற்றும் வீடுகள், கடைகள், குடோன்கள் ஆகிய இடங்களில் டயர், பழைய பாத்திரம், பழைய தொட்டிகள் மற்றும் இதர இடங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தேங்கி இருந்தால் . பொதுமக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்

error: Content is protected !!