India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பு மழை 716.54 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகம் காணப்பட்டது. இதனிடையே 2024-25 ஆம் ஆண்டில் ஜனவரி 2025 மாதம் வரை 10,369 ஹெக்டர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கலைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி காந்தி முருகேசன். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை நிர்வகித்து கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இலக்கிய அணி இணைச் செயலாளராக காந்தி முருகேசன் அறிவிக்கப்பட்டுள்ளார், அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல் ஆட்சித் தலைவர் உமா நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி காலை 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தண்ணீர் அதிகம் குடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட காவலா் பல்பொருள் அங்காடியில் மூன்றில் ஒருவா் என்ற விகிதத்தில் ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் குடும்பத்தில் வேலையில் இல்லாத மனைவி, குடும்ப உறுப்பினா்களை ரூ.15,000 மாத ஊதியத்தில் பணியமா்த்தும் பொருட்டு தகுதி வாய்ந்தோா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அங்காடியில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 – 45. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 28.03.2025 மாலை 5 மணி வரை. நாளை (மார்ச் 24) முதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆயுதப்படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை தெரிவித்துள்ளார். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார்.

ராசிபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்றிரவு ஆறுமுகம் ராசிபுரத்தில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு வந்த அரசு டவுன் பேருந்தும், டூவீலரும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் சரவணனின் இல்லம் முன்பாக நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலருடன் இருந்தனர்.

திருச்செங்கோடு அருகே சிறுமொளசியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருடைய இளைய மகள் செல்வி (17). கடந்த 2 ஆண்டுகளாக செல்வி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமடையவில்லை. இதனால் செல்வி மனவேதனையில் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.