Namakkal

News September 10, 2024

சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் பரிதாப பலி

image

நாமகிரி பேட்டை அருகே பிரசவத்தின் போது குழந்தையை தொடர்ந்து இளம்பெண்ணும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே. நகரை சேர்ந்த திவ்யா(21). இவருக்கு கடந்த 24 ஆம் தேதி பிரசவம் வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 29 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, இறந்தது. மேலும் திவ்யாவின் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News September 10, 2024

ஏபிடிஒ-க்களை இடம் மாற்றி ஆட்சியர் உத்தரவு

image

நாமக்கல் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேற்று இடமாற்றம் செய்து கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். கபிலர்மலை சங்கீதா, மல்லசமுத்திரம் கன்னியம்மாள், பள்ளிபாளையம் வெங்கடாஜலபதி, பரமத்தி பழனியம்மாள், இளங்கோவன் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பணி இடங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News September 10, 2024

குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

image

குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் கார்த்திகா(23). நேற்று காலை தனது ஒரு வயது பெண் குழந்தையை வீட்டில் படுக்க வைத்திருந்தார். பெட்சீட் ஒன்று ஒரு வயது குழந்தை மீது மூடப்பட்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் ஏதும் கேட்காததால், குழந்தையின் தாய் கார்த்திகா பெட்சீட் எடுத்து பார்த்த போது ஒரு வயது குழந்தை பிரதிக்சா மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 10, 2024

வேலை வாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம்(ம) தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

News September 9, 2024

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 09.09.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ச.உமா, தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மனுக்களுக்கு உடனடி நடவடிக்கையும், பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News September 9, 2024

கலெக்டரிடம் மனு வழங்கிய மக்கள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 468 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

News September 9, 2024

நாமக்கல்: ஆபரண தங்கம் ரூ 53,440க்கு விற்பனை

image

நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று 9ஆம் தேதி திங்கட்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: ஆபரண தங்கம் 8 கிராம் ரூ.53,440, 1 கிராம் ரூ.6,680, முத்திரைக் காசு 8 கிராம் ரூ.54,440, 1 கிராம் ரூ.6,800, வெள்ளி ஒரு கிராம் ரூ.90 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

News September 9, 2024

நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக ஆகாஷ் ஜோஷி இன்று பொறுப்பேற்றார் . அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல் நிலையம் வாரியாக உள்ள குற்ற வழக்குகள் மற்றும் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

News September 9, 2024

நாமக்கல்: பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

நாமக்கல்: பெரிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் காளிமுத்து – சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் நேற்று இரவு அந்த சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 9, 2024

நாமக்கல்லில் காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய் கனி பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.48, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.18, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.35, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.18, பாகல் ரூ.38, பீர்க்கன் ரூ.38 மற்றும் வாழைக்காய் ரூ.30. இதனிடையே நேற்று ஒரு கிலோ கேரட் ரூ.88க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில். இன்று ரூ.10 விலை உயர்ந்து ரூ.98க்கு விற்பனை செய்யப்பட்டது.

error: Content is protected !!