Namakkal

News September 16, 2024

பூமிக்கு அடியில் தென்பட்ட பெருமாள் சிலை: மக்கள் வழிபாடு

image

நாமக்கல், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவணி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில் முன்பு பள்ளம் தோண்டும்போது இரண்டடியில் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது. இரண்டடி உயரமுள்ள பழங்கால பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டு புதுச்சத்திரம் வருவாய் ஆய்வாளர் செல்வி தலைமையில் சிலையை மீட்டு அருகில் உள்ள கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

News September 16, 2024

நாமக்கல் மேயருக்கு வழங்கப்பட்ட செங்கோல் குறித்த தகவல்

image

நாமக்கல் நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 16ந் தேதி மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார், மாநகராட்சி மேயர் கலாநிதி அவர்களுக்கு 4 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்ட வெள்ளி செங்கோல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

வெள்ளி வென்ற மாணவிக்கு பாராட்டு

image

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவி துளசிமதி முருகேசன், பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்றார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எம்.பி இராஜேஸ்குமார் , அம்மாணவிக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்தார். உடன் கலெக்டர் உமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News September 16, 2024

கறிக்கோழி விலை மேலும் ரூ.2 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.109 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை விலை 505 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.97 ஆகவும் நீடித்து வருகிறது.

News September 16, 2024

நாமக்கல் மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம்

image

நாமக்கல் மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு மேயர் கலாநிதியிடம் செங்கோல் வழங்கினார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் பூபதி, கமிஷ்னர் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

சரக்கு வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

image

எருமப்பட்டி அருகே வரகூர் பகுதியில் சேர்ந்தவர் நல்ல கண்ணன்(70). இவர் நேற்று இரவு வரகூர் இருந்து துறையூர் செல்வதற்காக சாலை ஓரமாக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நல்ல கண்ணின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 16, 2024

நாமக்கல்லில் முதல் மேயரிடம் செங்கோல் வழங்கும் விழா

image

நாமக்கல் மாவட்டம் நகராட்சியாக இருந்து தற்போது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான ஆணை வழங்கபட்ட நிலையில், இன்று (16.09.2024) காலை 9 மணிக்கு தொடங்கும் முதல் மாமன்ற கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மேயரிடம் செங்கோலை வழங்கி சிறப்பிக்கிறார்.

News September 16, 2024

நாமக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

image

நாமக்கல் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் கலாநிதி தலைமையில் இன்று 16ஆம் தேதி திங்கட்கிழமை மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி துணை மேயர் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

News September 15, 2024

நாமக்கல் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
➤நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு
➤நாமக்கல் மாவட்டத்தில் உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தையொட்டி நாளை விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெறுகிறது.
➤சேந்தமங்கலம்: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
➤நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

News September 15, 2024

திருச்செங்கோட்டில் விவசாய கண்காட்சி

image

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் செப் 20, 21, 22 மூன்று நாட்கள் விவசாய கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பால் பண்ணை தொழில் லாபம் ஈட்டுவதற்கான வழிகாட்டுதல், நெல் அறுவடை இயந்திரம் அதன் மூலம் தொழிலகம் ஈட்டுவதற்கான வழிகாட்டுதல், ஆகிய வழிகாட்டுதலான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைத்து விவசாய பெருமக்கள் கலந்து கொள்ளுமாறு ராசி அக்ரி மார்ட் சார்பாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!