Namakkal

News September 19, 2024

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து

image

நாமக்கல், பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள S.புதுப்பாளையம் பகுதியில் தனியார் தேங்காய் நார் கம்பெனி இயங்கி வருகின்றது. இதில் வடமாநில தொழிலாளர்கள் 15 பேர்கள் வேலை செய்து வருகின்றனர் கம்பெனியில் நேற்று இரவு மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவில் திடீரென தீ பற்றி அருகில் இருந்த நார்களில் தீ பற்றி கம்பெனி முழுவதும் தீயில் எரிந்து சுமார் ரூ.3 கோடி மதிப்பு பொருட்கள் நாசம் ஆனது.

News September 19, 2024

நாமக்கல்லில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழப்பு

image

நாமக்கல், கணவாய்பட்டி தங்கதுரை சோனியா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தனியாஸ்ரீ. சோனியா நாமக்கல் முல்லை நகரில் உள்ள அக்கா சுமதி வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு நேற்று மின்சாரம் தடைபட்டது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனியாஸ்ரீ சுவிட்சை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது. பின் தனியாஸ்ரீ சத்தம் கேட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News September 19, 2024

பதக்கம் வென்ற நாமக்கல் மாணவியை பாராட்டிய எம்பி

image

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி – ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் மாணவி துளசிமணி, சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம்‌ வென்று ‌சாதனை படைத்தார். இந்நிலையில் பதக்கம் வென்ற மாணவி துளசிமதிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேற்று சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News September 18, 2024

நாமக்கல்லில் 500 புதிய ரேசன்கார்டுகள் தயார்

image

நாமக்கல் மாவட்டத்தில் 500 புதிய ரேஷன்கார்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவற்றை பயனாளிகளுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு நடந்து வருவாதாகவும் அதிகாரிகல் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதிய ரேஷன்கார்டுகள் கேட்டு 6,161 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை ஏறத்தாழ 500 தகுதியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு புதிய ரேஷன் கார்டு அச்சிட தயார் நிலையில் உள்ளது.

News September 18, 2024

செப்.20 இல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்கள் கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவிக்கலாம்.

News September 18, 2024

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 14, 12 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 18, 2024

குமாரபாளையம் மக்களுக்கு ஆட்சியர் தகவல்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி இன்று குமாரபாளையத்தில், ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு நேரடி கள ஆய்வு மேற்கொள்ளுதல், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிதல், தொடர்ந்து ஆய்வு கூட்டம், 19ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை திட்டப் பணிகளை ஆய்வு செய்தல் நிகழ்ச்சிசிகள் நடைபெற உள்ளது

News September 17, 2024

131வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என் புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட சில பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே இன்று 17ம் தேதி இரவு வளையப்பட்டியில் 131வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் சிப்காட் எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டனர். இதில் விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News September 17, 2024

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், வரும் (20.09.2024) வெள்ளிக்கிழமை அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

News September 16, 2024

நாமக்கல்லில் ஒரே நாளில் 314 மனுக்கள்

image

நாமக்கல்லில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 314 மனுக்களை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

error: Content is protected !!