Namakkal

News March 31, 2024

நாமக்கல்: தேர்தல் செலவினம் தொடர்பாக கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் அவர்கள், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஹர்ஜித் கவுர் அவர்கள் செலவின பார்வையாளர் அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது செலவின பதிவேடுகளை பராமரிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

News March 31, 2024

நாமக்கல்: ராணுவத்தினர் வாக்களிக்க ஏற்பாடு

image

மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி 100 % வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இந்திய இராணுவத்தில் பணியாற்றும் 390 வாக்காளர்களுக்கு மின்னணு தபால் வாக்குச்சீட்டுகள் (ETPBS) அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

நாமக்கல்: முதலமைச்சரை சந்தித்த நாமக்கல் வேட்பாளர்

image

இன்று ஈரோட்டில் நாமக்கல் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றாா். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன், நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 30, 2024

நாமக்கல்லில் ஒரே மேடையில் 4 வேட்பாளர்கள்

image

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி தொழில் வளர்ச்சிக்கு வெற்றி பெறப்போகும் எம்பியின் பங்கு குறித்த வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக தமிழ்மணி, திமுக மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சி கனிமொழி, சுயேட்சை வேட்பாளர் டாக்டர் எழில் கலந்து கொண்டு லாரி தொழில் வளர்ச்சி குறித்து பேசினர்.

News March 30, 2024

நாமக்கல்: ஓட்டுப்போட வாய்ப்பு

image

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.ராசிபுரத்தில், 2,105 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், 1,982 பேர், என, மொத்தம், 4,087 பேர் உள்ளனர். அதில், 977 பேருக்கு, வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் ஓட்டு போடும் வகையில், ’12டி’ படிவம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

image

நாமக்கலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில், பங்குனி மாதம் மூன்றாம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 30, 2024

நாமக்கல்: ரோட்டரி சங்கம் வழங்கிய தையல் இயந்திரம்

image

நாமக்கல் இரத்தினசாமி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்பள்ளி நாடு ஊராட்சி மன்றம் சார்பாக மகளிர்களுக்கு இலவச தையற் பயிற்சி வழங்கப்பட்டது பயிற்சியை சிறப்பாக மகளிர்களுக்கு நடத்தி கொடுத்த எப்சிபா குளோரியை பாராட்டி நாமக்கல் ரோட்டரி சங்கம் சார்பாக இலவசமாக தையல் இயந்திரத்தை மாவட்ட தலைவர் விஸ்வநாதன் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

நாமக்கல் பாஜக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

image

தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மரு.கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார்.இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் சேந்தமங்கலம் ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் வேட்பாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஐஜேகே மூத்த நிர்வாகி முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 29, 2024

நாமக்கல் தேர்தல் பணிமனை திறப்பு விழா

image

இந்திய கூட்டணி கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஈஸ்வரன் ,பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் பணிமனையை திறந்து வைத்தனர்.

News March 29, 2024

நாமக்கல்லில் ‘மீறினால் பாயும்’

image

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களை பொறுப்பாக பயன்படுத்தி சரியான தகவல்களை பொது மக்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.