India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாநகராட்சியில் (22/12/2024) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில், மாநகராட்சி உத்தரவுப்படி துப்புரவு அலுவலர் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் இருப்பதை ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.
காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை செல்லும் சாலையில் நாச்சிப்புதூர் ஏரி பகுதியில், சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு அவ்வழியே ஊர்ந்து வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உத்திர கிடிகாவல் ஊராட்சி செயலர் சுரேஷிடம் கூறினர். அவர் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் விட்டனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.93க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.88 ஆக சரிவடைந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.91 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
1.கொண்டி செட்டிபட்டி ஏரி நிரம்பி சாலையில் தேங்கிய நீர்
2.தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
3.ராசிபுரத்தில் பட்டுக்கூடு ரூ.82 ஆயிரத்திற்கு ஏலம்
4.பெரியமணலி : வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
5.நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்பி ராஜேஷ்குமார்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கான வானிலையில், பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம் 87.8க்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4க்கு மிகாமலும் இருக்கக் கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1.நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை ரூ 5.50
2.நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
3.மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்பி ராஜேஷ்குமார்
4.பல்லத்து கருப்பனார் கோயிலில் சிறப்பு பூஜை
5.போலீஸ் எஸ்எஸ்ஐ வீட்டில் திருடிய இரண்டு பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சண்முகம் (9498168906) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 20ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ 5.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் தொடர்ச்சியாக முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 என்ற அளவில் விலை நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC குரூப்2, 2ஏ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாட திட்டத்தின்படி முதன்மைத் தேர்வுக்கான (கணினி வழி தேர்வு முறை) நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச.23 முதல் (திங்கள் – வெள்ளிக்கிழமை வரை, காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை) நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.