India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிச. 27 காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத் துறை, இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதுடன் கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (23.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – நந்தகுமார் (9498170006), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
1.ஆட்சியரிடம் 511 மனுக்களை வழங்கிய மக்கள்
2.எம்.பி ராஜேஷ்குமாருக்கு முட்டை ஏற்றுமதியாளர்கள் நன்றி
3.வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
4.பரமத்தி வேலூர்: நாட்டுக்கோழிகள் விலை உயர்வு
5.உழவர் சந்தையில் ரூ.12.67 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு பகுதிகளில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நாளை (24/12/2024) காலை 9:30 மணிக்கு வார்டு எண்.9 மேற்கு வீதி நல்லிபாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.39 கொண்டிசெட்டிபட்டி கணபதி நகர் ஆகிய பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,290 வரையிலும் ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,450 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும் ஏலம் போனது.
பரமத்தி வேலூர் கோழிச்சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை உயர்வடைந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனையான நாட்டுக்கோழி நேற்று கிலோ ரூ.550 வரையிலும் விற்பனையானது. பண்ணைகளில் வளர்க்கப்படும் (கிராஸ்) நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ.350க்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.400 வரையிலும் விற்பனையானது. சண்டைக்காக வளர்க்கப்படும் சேவல்கள் ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையாயின.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் நாமக்கல்லில் இன்று 22ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் உயர்வு அதிகரித்தது இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.50 காசுகள் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
1.வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்
2.இறைச்சி கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதிப்பு
3.மல்லசமுத்திரம் அருகே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
4.நாமக்கல் அருகே பிடிபிட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
5.கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 சரிவு
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். மேலும் இன்று மார்கழி மாத முதல் ஞாயிறு முன்னிட்டு காலை 10:30 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்புஅபிஷேகமாக சொர்ண அபிஷேகம் நடைபெற்றது மாலை வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22.12.2024) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தங்கமணி (9443736199), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.