Namakkal

News May 13, 2024

நாமக்கல்: சரக்கு ரயிலில் 2700 ரேஷன் அரிசி வருகை

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,700 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் நாமக்கல் கொண்டுவரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் நாமக்கல் ரயில் நிலையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News May 12, 2024

நாமக்கல்லில் பக்தர்கள் தரிசனம்

image

உலக புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பின்னர் 1008 வடை மாலை சாத்திய பிறகு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம் தேன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.

News May 12, 2024

நாமக்கல்: ஆஞ்சநேயர் தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

image

நாமக்கல் நகரில் அமைந்துள்ள 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சாமி இது கைகளை நாமகிரி தாயாரையும், நரசிம்மர் பெருமாளும்,வங்கியாகும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆஞ்சநேயர் சாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று தங்க கிரீடத்துடன் தங்க காப்பு அலங்காரம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

News May 12, 2024

நாமக்கல்:வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

நாமக்கல் மாவட்டம்,மோகனூர், பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் மோகனூர்-வளையப்பட்டி வரை தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

News May 11, 2024

திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர் அமோகம்

image

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் இன்று மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரூ.16330 முதல் ரூ.18833 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15058 முதல் ரூ.17199 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ.19482 முதல் ரூ. 26569 வரையிலும் மொத்தம் 1800 மூட்டைகள் தொகை ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது.

News May 11, 2024

நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் 535 காசுகளுக்கு கோழி பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டல கோழி பண்ணைகளில் இன்று(மே 11) 545 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளது. வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

நாமக்கல்: ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள் 

image

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த இரட்டை சகோதரிகளான அக்சயா – அகல்யா ஆகியோர் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண் பெற்றது அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது.

News May 10, 2024

நாமக்கலில் மழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

நாமக்கல்: 10ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்

image

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் அருகே முத்துடையார்பாளையத்தை சேர்ந்த மாணவி ஹரிணி புதன்சந்தை ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவி ஹரிணி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக இடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணிக்கு ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டி மகிழ்ந்தனர்.