India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘இலகு மோட்டார் வாகன Driver(LMV)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 8th முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க இங்கே <

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, வழங்க உள்ளார். இதில் ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், பேளுக்குறிச்சியில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.8) மாவட்ட ரோந்து அதிகாரி- சுரேஷ்குமார் ( 9498168363), நாமக்கல் – லட்சுமணதாஸ் ( 9443286911), ராசிபுரம் – சுகவனம் ( 9498174815), திருச்செங்கோடு – ராதா ( 9498174333), வேலூர் – பொன்குமார் ( 6374802783) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

எருமப்பட்டி ஊராட்சி பழையபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவருக்கு சிறந்த பள்ளியாக நிர்வகிப்பது, மற்றும் உயர் கல்விக்கு மாணவர்களை அதிகளவில் சேர்த்து அனுப்பியது, உள்ளிட்ட சேவைகளை பாராட்டி, இன்று ஆகஸ்ட் 8ந் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர் மாரியப்பனை பாராட்டி நினைவு பரிசை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாட செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திரளணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் ஆண்களுக்கும் 5-ம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்ககுக்கு<

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலையாக 94.1° ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும், வேலைக்கு செல்வோரும் அவதியடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.