Namakkal

News January 3, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆகவே நீடிக்கிறது.

News January 3, 2025

கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிக்கு அர்ஜூனா விருது

image

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படித்து வரும் மாணவி துளசிமதி முருகேசன் சமீபத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதனையடுத்து இவருக்கு மத்திய அரசு விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை அறிவித்துள்ளது.

News January 3, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி மாத வெள்ளியை முன்னிட்டு இன்று காலை 10.3 0மணிக்கு பலவித வாசனை கொண்டுசிறப்பு அபிஷேக பின்அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

News January 3, 2025

மது போதையில் நகர பேருந்தை எடுத்து சென்ற நபர் கைது

image

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் எஸ்.9 என்ற பேருந்தை ஓட்டுநர் நிறுத்தி விட்டு உணவருந்த சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது பேருந்து இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சங்ககிரி அருகில் பேருந்து இருப்பது தெரிந்தது. போலீசார் சென்று பார்த்த போது மது போதையில் இருந்த நபர் பேருந்தை எடுத்துவந்துள்ளார்.

News January 3, 2025

நாமக்கல்: ஒரேநாளில் மது விற்பனை இவ்வளவு கோடியா?

image

நாமக்கல் மாவட்டத்தில் 180-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும். அதை முன்னிட்டு புத்தாண்டு அன்று நாமக்கல் மாவட்டத்தில் மதுபானங்களின் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்து இருந்தது. அதன்படி அன்றைய நாளில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 3, 2025

வேலை: நாமக்கல் கலெக்டர் அழைப்பு

image

தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி சமூகத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சிகள் சர்வதேச விமான போக்குவரத்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 18 வயது முதல் 23 வயது நிரம்பியவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

நாமக்கல்லில் 5 நாட்கள் காளான் வளர்ப்பு பயிற்சி

image

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜனவரி (20-01-2025) முதல் (24-01-2025) வரை 5 நாட்கள் சிறப்பு பயிற்சியாக, காளான் வளர்ப்பு தொழில் தொடங்க உள்ள பட்டியலின நபர்களுக்கு, 5நாட்கள் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பட்டியலினத்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 9943008802, 959746373 (ம) 7010580683 தொலைபேசி எண்களை அணுகவும்.

News January 3, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு: நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

2025-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரசு பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு தமிழக அரசால் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் புகார்கள் இருப்பின் இதில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (02/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9894177823), ராசிபுரம் – அம்பிகா (9498106258), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 2, 2025

சென்னை – போடி ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும்!

image

சென்னை சென்ட்ரல் – போடி விரைவு ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தின் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள், புதன், வெள்ளி என வாரத்திற்கு 3 முறை ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகளிடையே மழிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்!

error: Content is protected !!